அகில தனஞ்சயவுக்கு பதிலாக நிஷான் பீரிஸ்


இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை குழாத்தில் சுழற்பந்து வீச்சாளரான நிஷான் பீரிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
அகில தனஞ்சயவின் வெற்றிடக்குக்கு பதிலாகவே அவர் இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளரான அகில தனஞ்சயவின் பந்துவீச்சில் சந்தேகம் நிலவுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்தோடு, 14 நாட்களுக்குள் அவரது பந்துவீச்சு தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, இந்தப் பரிசோதனை எதிர்வரும் வெள்ளிக்கிழமை அவுஸ்தி​ரேலியாவின் பிரிஸ்பேர்னில் நடைபெறவுள்ளது.
இதற்காக அகில தனஞ்சய இன்று இரவு அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளது.
இதனால், இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவருக்கு விளையாட முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், அகில தனஞ்சயவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளரான நிஷான் பீரிஸ் இந்தப் போட்டிக்கான இலங்கை குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

Post a Comment

0 Comments