வட்டமடு விவசாயிகளை கைது செய்தமை உரிமை மீறலாகும் ; பஹத் ஏ மஜீத் கண்டனம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 20, 2018

வட்டமடு விவசாயிகளை கைது செய்தமை உரிமை மீறலாகும் ; பஹத் ஏ மஜீத் கண்டனம்அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டமடு தோணிக்கல் பிரதேசத்தில், மகாபோக நெற்செய்கைக்காக வயல் வேலையில் ஈடுபட்டிருந்த 17 பேர், வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளால் நேற்று (19) கைது செய்யப்பட்டுள்ளனரென அறியக்கிடைத்துள்ளது, இந்த கைது நடவடிக்கையினை மனித உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கும் சமாதான நீதவான்கள் பேரவைகண்டிப்பதாக அதன் தலைவர் பஹத் ஏ.மஜீத் தெரிவித்துள்ளார்,

குறித்த அமைப்பின் கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

வட்டமடு உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தில் 2500 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் பல்வேறுபட்ட திணைக்களம் மற்றும் ஏனைய அமைப்பால் சுவீகரிக்கப்பட்டு அங்கு செற்பயிர்செய்கை செய்யப்படாமல் இருப்பதை எமது அமைப்பு ஏலவே பலமுறை அரசுக்கும், சர்வதேச அமைப்புகளுக்கும் தெரிவித்துள்ள நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளமை மிகவும் வருத்தமளிக்கிறது.

மனிதன் உயிர்வாழ்வது மாத்திரமின்றி, அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ தேவையான அனைத்தும் மனித உரிமைகள் ஆகும், அவற்றில் அவனது தொழில் வாழ்விடம், நிலம் என்பன முக்கிய பங்கு வகிக்கிறது, பண்டைய காலம் தொட்டு வட்டமடு உள்ளிட்ட காணிகளில் முன்னோர்கள் விவசாயம் செய்து வந்துள்ளனர், அப்போது இல்லாத பிரச்சினைகள் இன்று எப்படி வருகிறது? அது மாத்திரமின்றி நெல்லுக்கும் அரிசிக்கும் தட்டுப்பாடு இருக்கும் இந்த காலப்பகுதியில் விவசாயத்தை தடைசெய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். 

கைது செய்த விவசாயிகளை விடுதலை செய்வதோடு குறித்த பகுதிகளில் விவசாயம் செய்வதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு செய்யவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages