இன்றைய பாராளுமன்ற கலவரத்தில் ரிஷாத் எம்.பி தாக்கப்பட்டாரா ??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 15, 2018

இன்றைய பாராளுமன்ற கலவரத்தில் ரிஷாத் எம்.பி தாக்கப்பட்டாரா ???


தன்னை மறந்த நிலையில் கூக்குரல் இட்டும் பலரை தாக்கவும் முட்பட்டுகொண்டிருந்த கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரச தரப்புக்கு தாவிய ஆனந்த அளுத்கம எம்.பியை ரிஷாத் எம்.பி சமாதானப்படுத்த முயற்சித்த போது அவரை தாக்க அலுத்கமகே எம்.பி முற்பட்டார். எனினும் ஏனைய சில உறுப்பினர்கள் அதனை தடுத்துவிட்டனர்.

இதேபோன்று மஹிந்தவுடன் காரசாரமாக உரையாடிய சம்பிக்க ரணவக்க எம்.பி.யை அரச தரப்பின் எம்.பி.யான லோஹான் ரத்வத்த நெஞ்சில் பிடித்து தள்ளிய சம்பவம் ஒன்று இன்றைய பாராளுமன்ற அமர்வில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்றைய அமர்வில் ஏற்பட்ட அமளிதுமளியின்போது சபாநாயகரை அரச தரப்பினர்  தாக்க முற்பட்டுக்கொண்டிருந்த நிலையில் அது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவுடன் அவரது ஆசனத்துக்கு அருகில் சென்று ஐக்கிய தேசியக் கட்சியின் சம்பிக்க ரணவக்க எம்.பி காரசாரமாக பேசிக்கொண்டு இருந்த போது குறுக்கே வந்த அரச தரப்பின் லோஹான் ரத்வத்த எம்.பி சம்பிக்க ரணவக்கவை நெஞ்சில் பிடித்து தள்ளியதுடன் வரை தாக்கவும் முற்பட்டார். 
எனினும் குறுக்கிட்டு தடுத்த மஹிந்த ராஜபக்ஷ ரோஹான் ரத்வதவை அகன்று செல்லுமாறு குறிப்பிட்டு சம்பிக்கவை தன்னருகே அழைத்து கைலாகு கொடுத்து தோளில்  தட்டி சமாதானப்படுத்தினார். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages