அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சூடு; இருவர் வைத்தியசாலையில் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 27, 2018

அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சூடு; இருவர் வைத்தியசாலையில்


அக்கரைப்பற்று பகுதியில் இரு இளைஞர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தவறுதலாக இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை  அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று இரவு விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, தலைக்கவசமின்றி பயணித்த மோட்டார்சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளை பிறப்பித்தபோதிலும், அதனை மீறி பயணிப்பதற்கு ஓட்டுநர் முயற்சித்துள்ளனர்.
குறித்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியமையால் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரும் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages