Header Ads

Breaking News

முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தாவியுள்ளதா ??? உண்மை ரிப்போர்ட்


-அபூ ஜாஸி - 
முஸ்லீம் காங்கிரஸ் பிரதமர் மஹிந்த அணி யுடன் இணைந்துள்ளதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என முஸ்லீம் காங்கிரஸ் முக்கியஸ்தர் நமது ஈஸ்ட் டைம்ஸ் செய்தித் தளத்திற்கு சற்றுமுன் தெரிவித்துள்ளார். 

"நாம் நமது சமூகத்தின் பலதரப்புக்களையும் அழைத்து இப்போது அவர்களின் கருத்துக்களை ஆலோசித்துக் கொண்டிருக்கின்றோம். நாட்டின் கௌரவத்தினையும், ஜனநாயகத்தினையும் நமது மக்களின் அபிலாசைகளையும் அடிப்படையாக வைத்தே நாம் ஆட்சியாளர்களை அணுகி வருகின்றோம். 

சிலர் தமது நிலைப்பாட்டை உறுதிப் படுத்திக்க கொள்வதற்காக நம்மையும் இணைத்து செய்திகளை பரப்பி வருகின்றார்கள். அதில் எள்ளளவும் உண்மையில்லை. எனவே நமது போராளிகள் இது குறித்து அலட்டிக் கொள்ளத்தேவையில்லை" எனவும் கூறினார். 

முஸ்லீம் காங்கிரஸ் இரண்டு கேபினட் அமைச்சுக்களை, மூன்று பிரதி அமைச்சுக்களை புதிய அமைச்சரவையில் பெற்றுக் கொண்டுள்ளது என்ற செய்தி தொடர்பில் வினவிய போதே இவ்வாறு கூறப்பட்டது. 

No comments