Comments System

header ads

முஸ்லீம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் இணைகிறது ; அதிரடி அரசியல்


-அஃனப் ஜாஸி -
கடந்த 24 மணி நேரத்துக்குள் அரசியலில் ஏற்பாட்டு வரும் மாற்றங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகியன இணைந்து செயலாற்றக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அ.இ.ம.கா வின் தேசியப்பட்டியல் எம்.பி VC இஸ்மாயில் அவர்கள் ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவாக ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ளச் சென்றமை, மற்றும் சிலர் அவ்வாறான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுகின்றமை என்பவற்றை அடிப்படையாக கொண்டு புதிய பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் ஆதரவளிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றினை ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாத் பதுர்டீன் ஆகியோர் இணைந்து நடாத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறான சந்தர்ப்பம் ஒன்றில் இவ்விரு கட்சிகளும் இணைந்து முடிவுகளை தீர்மானம் செய்வது சமூகத்திற்கு மிகப் பெரும் பலமாகும். இதிலும் சமூகம் சார்பான விடயங்களை முன் வைத்து தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என அரசியலாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். 

தத்தமது கட்சியின் உறுப்பினர்களின் தனிப்பட்ட வெளியேற்றங்களை தவிர்ப்பதற்கான உபாயமாகவே இச்சந்திப்பு அமையும் என்பதுடன் புதிய பிரதமருக்கு ஆதரவான முடிவுகள் பெறப்படலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments