Header Ads

Breaking News

வட கொரியாவின் ஏவுகணைத் தளங்கள் ; அமேரிக்கா அதிர்ச்சி



வட கொரியாவில் அறிவிக்கப்படாத குறைந்தது 13 ஏவுகணைத் தளங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது அணுவாயுதக் களைவு தொடர்பில் வட கொரியாவை இணங்கச் செய்வதற்கு, அமெரிக்காவுக்கு சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் வட கொரிய ஏவுகணைத் தளங்களில் நகர்வுகள் மற்றும் செயல்முறைகள் இடம்பெற்றதை அவதானிக்க முடிந்ததாக வொஷிங்டனில் உள்ள தனியார் கற்கை நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
வட கொரியாவின் மலைப் பிரதேசங்களில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவகணைகள் மூலம் அமெரிக்காவைத் தாக்கக்கூடிய இடங்களில் குறித்த தளங்கள் அமைக்கபப்ட்டுள்ளதாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்க மற்றும் வட கொரிய ஜனாதிபதிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, முழுமையான அணுவாயுதக் களைவு தொடர்பில் வட கொரியா இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments