இன்று மரணித்த மர்ஹூம் கபீர் சேருக்காக நமது பிரார்த்தனைகள்


சமகாலத்தில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் பொறுப்புக்களை தன்னகத்தே சுமந்து நமது பிரதேசத்தின் கல்விச் சொத்தான இப்பாடசாலைக்கு தன்னை அர்ப்பணித்து ஒரு மனித உள்ளம் இன்று தன்னைப்படைத்த  இறைவனிடம் ஓய்வை அடைந்துள்ளது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்.

புன்சிரிப்பும், மென்மையான பேச்சும் அவருக்கு காய் வந்த காலை மிக இனிமையாக நம்மோடு உரையாடி, உறவாடி நேற்று வரைக்கும் நம்மோடு பயணித்த உறவு இன்று பாதையில் நம்மைவிட்டு வேகமாக அந்த வல்ல ரப்புல் ஆலமீனிடம் தஞ்சம் அடைந்துள்ளது. யா அல்லாஹ் அன்னாரின் பாவங்களை பொருத்தருவாயாக (ஆமீன் )

நீண்ட காலம் பாடசாலையோடு தன்னை அர்ப்பணித்து பல உயர்ந்த குணங்கள், தெளிவான சிந்தனை, மார்க்கப்பற்று அத்துடன் உதவி செய்யும் பல உயர்ந்த பதவிகள் எல்லாவற்றுக்கும் அடிப்படைக்கு காரணமாய் ஆறம்பக்கல்வியை கற்றுத்தந்தார் யா அல்லாஹ் அன்னாருக்கு கபுருடைய வேதனைகளை விட்டும் பாதுகாப்பு வழங்கிடுவாயாக (ஆமீன் )

கனிவான குடும்பத்துடன் கணவனாய், தலைவனாய், தகப்பனாய், மகனாய் சகோதரனாய், எல்லாமாகவும் இருந்திருந்தாய் எங்களை இவ்வளவு கவலைப்பட வைத்த நீங்கள் உங்கள் குடும்பத்துக்கு எவ்வளவாய் இருந்திருப்பீர்கள், நாங்களும் அதை உணர்ந்திருக்கின்றோமே யா அல்லாஹ் மரணித்த இந்த ஆத்மாவை உன்னுடைய அருளைக் கொண்டும் ஸ்திரப்படுத்திவிடுவாயாக, யாஅல்லாஹ் இந்த அடியானுடைய குடும்பத்தருக்கு  இத் துன்பத்தை சகிக்க கூடிய சக்தியை வழங்கிவிடுவாயாக , அவர்களது தேவைகளை நிவர்த்தி செய்து விடுவாயாக 

Post a Comment

0 Comments