Header Ads

Breaking News

சபையில் இரத்தம் ஓடியதற்கு சபாநாயகரே காரணம் ; எஸ்.பி


பாராளுமன்றத்தில் இன்று ஏற்பட்ட குழப்ப நிலைக்கு சபாநாயகரே காரணமாவார் என குற்றஞ்சாட்டியுள்ள எஸ்.பி.திஸாநாயக்க, சபாநாயகர் நிலையியற் கட்டளையின் பிரகாரம் செயற்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பாட்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும் சபாநாயகர் மஹிந்த ராஜபக்ஷ்வின் உரைக்கு வாக்கெடுக்க அனுமதித்ததாலே பாராளுமன்றத்துக்குள் இன்று குழப்பம் ஏற்பட்டது. 
சபாநாயகர் கட்சி சார்ப்பாக நடந்துகொள்ளாமல் நேர்மையாக செயற்பட்டிருந்தால் இந் நிலை ஏற்பட்டிருக்காது. சபை அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் இரத்தம் ஓட்டப்படுவதற்கும் சபாநாயகரின் பக்கச்சார்ப்பான செயற்பாடே காரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற அமர்வு இன்று முடிவடைந்த பின்னர் ஆளுங்கட்சியினால்  உறுப்பினர் அறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments