Comments System

header ads

முஸ்லீம் எதிர்ப்பு நாடுகள் ரணிலுக்கு ஆதரவு


-அபூ ஜாஸி -
இலங்கையில் புதிய பிரதமர் மாற்றம் உலக நாடுகளில் பலமான பல எதிரொலிகளை உண்டு பண்ணியுள்ளது. இந்நிலையில் உலக முஸ்லீம் சமாதான எதிர்ப்பு நாடுகள் வரிந்து கட்டிக்கொண்டு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்களின் பின்னணியில் செயற்படுகின்றமை வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

அந்த வகையில் இங்கிலாந்து, அமெரிக்கா, மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஐ.தே.க சார்பான அரசுக்கு பெரிதும் ஆதரவளித்து வருகின்றதுடன், அரசின் மீதான திணிப்புகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னர், ஐ.தே.க ஆட்சிகாலத்தில் முஸ்லீம்களை தனி இனமாக LTTE  உடனான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க விடாமல் செய்த வெளிநாடுகளும், ரணிலும் மீண்டும் கைகோர்த்துள்ளனர் என்பதை இலங்கை முஸ்லீம்கள் மறந்துவிடவில்லை என்பதுவும் மீள் ஆற்றுகைக்குட்படுகின்றது. 

இதேபோன்றே ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் லிபியா போன்ற நாடுகளிலும் ஜனநாயகத்திற்க்கான போராட்டம் என்ற போர்வையில் முஸ்லீம் அழிப்பு மற்றும் அடிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டன என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

0 Comments