ஐ.தே.க ஆட்சியமைக்க தமிழ் கூட்டமைப்பை சேர்க்கலாம் ; சுசில் பிரேமஜயந்த - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 27, 2018

ஐ.தே.க ஆட்சியமைக்க தமிழ் கூட்டமைப்பை சேர்க்கலாம் ; சுசில் பிரேமஜயந்ததமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஐ.தே.க ஆட்சியமைத்தால் தங்களுக்குப் பிரச்சினை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐ.தே.கவுக்கு  ஆட்சிய​மைக்க மூன்றிலிரண்டு பெரும்பான்மை இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ​இணைத்தே ஐ.தே.க தனக்கு 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் மக்கள் விடுதலை முன்னணியினர் ஒரு​போதும் ஐ.தே.கவுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை எனத்திட்டவட்டமாக தெரிவித்திருப்பதால், அவர்கள் த.தே.கூட்டமைப்போடு இணைந்து ஆட்சியமைக்கலாம் எனவும் அவர் கூறினார்.
எனினும், அரசாங்கத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதியடமே இருப்பதாகவும், இதற்கு பொதுத்தேர்தலுக்குச் செல்வதே தீர்வு எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages