நேற்றைய உலகப் பரபரப்பு திருமணம் ; புகைப்படம் இணைப்பு - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 15, 2018

நேற்றைய உலகப் பரபரப்பு திருமணம் ; புகைப்படம் இணைப்புரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ரன்வீர் தீபிகா இணை தங்களது திருமணப் படங்களை வெளியிட்டுள்ளது. பாலிவுட்டின் முன்னணி ஜோடியான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனும் காதலித்து வரும் தகவல் சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருந்த வேளையில், திருமண தேதியை அறிவித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். கோலி அனுஷ்கா திருமணத்துக்குப் பின்னர், இந்தியா முழுவதும் அதிக கவனம் பெற்ற திருமணமாக இது அமைந்தது. 
இவர்களது திருமணம் பிரமாண்டமான முறையில் நேற்று, இத்தாலியில் நடைபெற்றது. திருமணம் நடைபெற்றதே தவிர, திருமணம் தொடர்பான எந்தப் புகைப்படமும் வெளிவராத வண்ணம் பார்த்துக்கொண்டனர். மணக்கோலத்தில் இருவரையும் காண, அனைவரும் ஆர்வத்துடன் இருந்தனர். ஆனால், திருமணம் தொடர்பான படங்கள் வெளியாகவே இல்லை. 
மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, தானும் தீப்வீர் திருமண படங்களைக் காண ஆர்வமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். திருமணம் ஆகி ஒருநாளுக்கு மேல் ஆகிவிட்டபோதும், அவர்கள் திருமணம் தொடர்பாக எந்தப் புகைப்படமும் வெளிவரவில்லை. 
இந்நிலையில்தான் இன்று இரவு 8 மணியளவில் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ட்விட்டரில் தங்களது திருமணம் தொடர்பான இரண்டு படங்களை வெளியிட்டனர். படத்தை வெளியிட்ட சில நிமிடங்களிலே # DeepikaWedsRanveer ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages