Comments System

header ads

ஓட்டமாவடி, வாழைச்சேனை, மாவடிச்சேனை, பிறைந்துரைச்சேனை, காவத்தமுனை வெள்ளத்தால் பாதிப்பு



தொடர்ந்து வரும் மழையினால் கல்குடாத் தொகுதியின் பல பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக நமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

காவத்தமுனை, பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை, செம்மனோடை, மாவடிச்சேனை மாஞ்சோலை, ஓட்டமாவடி, மீராவோடை போன்ற பிரதேசங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களின்  வீடுகள் நீரில் மூழ்கி வருகின்றன. 

சரியான வடிகால் அமைப்பின்றி அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் வீதிகளும், முறையற்ற வடிகான்களும் நீரை வடிந்தோடச் செய்வதில்  பெரிதும் சிக்கல்களை உண்டு பண்ணி வருகின்றது. 

இந்நிலையில் மக்கள் தொண்டர்  அடிப்படையில் களத்தில் நின்று நீரினை வடிந்தோடுவதற்கான முயறசிகளை எடுத்து வருகின்றார்கள்.

இம்மழை தொடரும் பட்சத்தில் பாதிப்பு மிக அதிகமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது . 

Post a Comment

0 Comments