Header Ads

Breaking News

குடும்பத்துடன் பார்க்க (கூடிய) வேண்டிய ரஜினியின் 2.O (பகிருங்கள்)

-சுரேஷ் -அலுவலக செய்தியாளர், இலங்கை -

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய, பார்க்கக்கூடிய ஒரு Technical Fiction Movie என்ற பட்டியலில் ரஜினி நடித்துள்ள 2.O  உண்மையிலேயே அடுத்த லெவல் தான். தமிழ் சினிமாவுக்கு உண்மையாகவே வழிகாட்டியுள்ளது. 

தமிழ் சினிமாவின் காதல், சண்டை, கள்ளன், பொலிஸ் என்கின்ற வட்டத்தை தாண்டி, மனிதம், உயிரியல், சமகால செல் போன் பிரச்சனைகள் என்ற நாளாந்த விஷயங்களோடு சமூகத்தின் அடுத்த சந்ததியினருக்கு பலமான ஒரு செய்தியை கூறியிருக்கிறது 2.O 

பிரமாண்டம், நடிப்பு, தொழிநுட்பம் என்று சினிமா வுக்கு தேவையான கலவை. விசேடமாக Reloaded Citty version 2.O மீண்டும் ரஜனியை திரையில் கண்ட களிப்பு. "....1,2 நம்பர் எல்லாம் சின்ன பசங்க விளையாட்டு எப்பயும் நாத்தான் சூப்பர் ஹீரோ" வசனம் மிக நிதர்சனம். ரஜனிக்கு மாத்திரமே மிக பொருத்தமானதும் கூட. உலக அளவில் மக்களை அழிக்கும் கார்ப்பரேட் பிரச்சைகளில் முதலிடம் பெரும் network frequency என்கின்ற ஆட்கொல்லி அளவு அதிகரிப்புக்கு நல்ல சாட்டையடி.

அரசியலில் என்னுடைய வகிபாகம் என்ன என்பதை தலைவர் பாணியில் தலைவரே சொல்லி இருக்கின்றார். அப்படி என்றால் உலகின் முன்னோடியான முதல்வராகவும் இருப்பார். 

அதேநேரத்தில் வசூல் பக்கம் பார்த்தால், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் முதல் நாளில் சென்னையில் சர்கார் படத்தை விட அதிகம் வசூல் ஈட்டி முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தது.
தற்போது இரண்டாவது நாள் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது.
இரண்டாவது நாளில் 2.0 படம் சென்னையில் 2.13 கோடி பிரம்மாண்ட வசூல் பெற்றுள்ளது. சென்னையில் மட்டும் 2 நாளில் 4.77 கோடி கிராஸ் வசூல் வந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments