Header Ads

Breaking News

DCC இணைத்தலைவர் பதவிகளில் இருந்து எம்.எஸ்.உதுமாலெப்பை ராஜினாமா ???


அம்பாறை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழு இணைத்தலைமை பதவியில் இருந்தும் ஏனைய பதவிகளில் இருந்தும் தேசிய காங்கிரசின் முன்னாள்  அமைப்பாளரும், முன்னாள் மாகாண அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை ராஜினாமா செய்துள்ளதாக உறுதிப்படுத்தத் தக்க செய்திகள் தெரிவிக்கின்றன. 

முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பைக்கு மிக நெருக்கமானவராக கருதப்பட்ட இறக்காமம் மன்சூர் DCC இணைத்தலைமை பதவியில் இருந்து தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லா அவர்களினால் அதிரடியாக நீக்கப்பட்டதே இவ் இராஜினாமாவிற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

தேசிய காங்கிரசின் பதவிகளில் இருந்து விலகிக் கொண்ட எம்.எஸ்.உதுமாலெப்பை மிக விரைவில்புதிய அரசியல் பாதையில் பயணிப்பார் என நம்பப்படுகிறது. 

No comments