Comments System

header ads

வான்கதவுகள் திறப்பு ; மக்கள் அவதானம்




கடும் மழையுடனான வானிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 12 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம், நாச்சதுவ, இராஜாங்கனை, மவ்ஆர, தியவெவ மற்றும் வெஹரகல நீர்த் தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் தெதுரு – ஓயா, நாலந்த, தப்போவ, மெடியாவ, மாகல்ல தம்பராவ மற்றும் அம்பேவல உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 2 நாட்களுக்கு முன்னர் திறக்கப்பட்ட விக்டோரியா நீர்த்தேக்கத்தின் இரு தன்னியக்க வான்கதவுகள் தற்போது மூடப்பட்டுள்ளன. இந்தநிலையில், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் நேற்று மாலை திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments