Comments System

header ads

ஓட்டமாவடி பிரதேச சபை கவனத்தில் எடுக்கவில்லை; களத்தில் கௌரவ ஹாமித் மௌலவி




மிக நீண்ட காலமாக மழை காலங்களில் நீர் தேங்கி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்த ஓட்டமாவடி 208 B/2 கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள எஸ்.எம்.ரீ.ஹாஜியார் குறுக்கு வீதியின் வடிகான்களைத் துப்பரவு செய்யும் பணிகளை நேற்று 28.10.2018ம் திகதி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச உறுப்பினர் எம்.ஐ.ஹாமீத் மெளலவி மேற்கொண்டார்.
இந்த வீதி நேற்று பெய்த மழையினால் முற்றாக நீர் நிரம்பிக்காணப்பட்டதுடன், போக்குவரத்துத்தடையும் காணப்பட்டது, குறித்த வீதியினை இப்பிரதேச மக்கள் நாளாந்தப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தி வருவதுடன், மழை காலங்களில் முற்றாகப் பயன்படுத்த முடியாத நிலையும் இவ்வீதியை அண்டியுள்ள அஸ் ஸலாஹிய்யா முன்பள்ளிச்சிறார்கள் தமது கற்றல் நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியாத நிலையும் காணப்பட்டது.
அத்துடன், குறித்த வீதி வடிகானின் நிலைமை தொடர்பில் சபை அமர்வுகளில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு, பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் எதுவித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதுடன், கோரிக்கை தொடர்பில் பராமுகமான நிலையே காணப்பட்டது.
அத்துடன், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
தன்னால் வழங்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்காமல் உடனடியாகச் செயற்பட்ட பிரதேச சபை உறுப்பினர் பிரதேச மக்களின் பங்களிப்புடன் நீர் வழிந்தோடச் செய்வதற்குரிய செயற்பாடுகளை முன்னெடுத்தார்.
அதே நேரம், எம்மால் விடுக்கப்படும் இவ்வாறான கோரிக்கைகள் கணக்கிலெடுக்கப்படாத நிலை காணப்படுவதுடன், பிரதேச சபையின் செயற்பாடுகள் மந்தகதியில் செல்வதாகவேவுள்ளதென பிரதேச உறுப்பினர் எம்.ஐ.ஹாமீத் மெளலவி கவலை தெரிவித்தார்

பிரதேச மக்களின் நன்மைகருதி பிரதேச சாபை உறுப்பினர் எம்.ஐ.ஹாமீத் மெளலவி எடுத்துக்கொண்ட அக்கறையும் முயற்சியும் பாராட்டுக்குரியது.

Post a Comment

0 Comments