Comments System

header ads

முஸ்லீம் (மக்கள்) காங்கிரஸ் எதை பேரம் பேசும் ?


- அன்வர் நௌஷாத் -
சிறுபான்மை அரசியலில் மீண்டும் ஒரு முறை ஆட்சியை தீர்மானிக்கும் வரம் அமைந்திருக்கின்றது. முஸ்லீம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பன தமது சமூகம் சார்ந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்காகவும் உரிமைகளை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும் இச்சந்தர்ப்பம் அமைந்துள்ளது. 

தமிழ் தேசிய கூட்டமைப்பானது தனது இலக்குகளில் இருந்தும் மாறப் போவதில்லை. முஸ்லீம் காங்கிரஸ் தனது உள்ளக கட்டுமானங்களை வெற்றி கொள்வதற்கான திருப்திபடுத்தக் கூடிய தீர்வுகளை பேரம் பேசும் முன்னிலை தோன்றியுள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்கப்போவதில்லை. 

முஸ்லீம் (மக்கள்) காங்கிரஸ் தமது தரப்பில்,
கரையோர அலகு /மாவட்டம் ; முஸ்லீம் அரசாங்க அதிபர் 
வடக்கு மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு 
வாழைச்சேனை பிரதேச சபை 
சாய்ந்தமருது பிரதேச சபை 
ஒலுவில் துறைமுக விவகாரம் 
முஸ்லீம்களின் காணி விவகாரங்கள் 
வட்டமடு, நுரைச்சோலை, கிரான்கோமாரி , பொத்துவில், ஏனையவை 
கள்ளிச்சை, வடமுனை, ஊத்துச்சேனை, வாகனேரி ஏனையவை 
ஜபல் மலை, புல்மோட்டை, ஏனையவை 

என அடைய வேண்டிய இலக்குகளை இலக்கு வைத்து பேரம் பேச வேண்டிய நிலைமை உள்ள போதும் எவ்வாறான காய் நகர்த்தல்களை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதையும்  அறியவேண்டியுள்ளது.

மற்றொரு முஸ்லீம் அணியான ரிஷாத் அணி இவ்விடயத்தில் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது என்பதுவும், முஸ்லீம்களின் உரிமைகள் குறித்த சந்தர்ப்பத்தில் மு.கா வுடன் உடன்பட்ட நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதுவும் முஸ்லீம் சமூக அரசியல் ஆய்வாளர்களின் நிலைப்பாடாகும்.  

மஹிந்த அணி தனியாக ஐ.தே.க வில் இருந்து இருந்து கட்சி தாவும் உறுப்பினர்களை கொண்டு ஆட் சியமைக்க முடியுமான நிலைமை இருந்தாலும் சிறுபான்மை கட்சியான மு.கா மீதான எதிர்பார்ப்பு இரு தரப்பிலும் அதிகரித்திருக்கின்றது என்பது வெள்ளிடைமலை. 




Post a Comment

0 Comments