Comments System

header ads

நான் உயிர் விடவும் தயார் ; சஜித்


மக்களின் உரிமைகளுக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் என் தந்தைப்போன்று உயிர் தியாகம் செய்யவும் நான் தயாராகவுள்ளேன் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, மக்களின் வாக்குரிமையை துஷ்பிரயோகம் செய்து, சர்வஜன வாக்குரிமைக்கு மதிப்பலிக்காமல் 60 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பினை தூக்கி எரிந்து சர்வாதிகாரமாக செயற்ப்பட்ட ஜனாதிபதிக்கு எதிராக மக்கள ஒன்று திரள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 
ஐக்கிய தேசிய முன்னணியினர் இன்று அரலிமாளிகை வட்டாரத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். 
மேலும் பலவந்தமாக ஆட்சியினை பறித்து தன்னாதிக்கமாக புதிய பிரதமரை தெரிவுசெய்த ஜனாதிபதி, எதற்காக பாராளுமன்றத்தை மூடிவைத்துள்ளார். ஜனாதிபதி செய்தது ஜனநாயகமானால் அதற்கான  பதிலை பாராளுமன்றத்தில் போட்டியிட்டு நிரூபிக்க வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.  

Post a Comment

0 Comments