முஸ்லீம்கள் கிழக்கில் மட்டுப்படுத்தப்படல் வேண்டும் ; கருணா


- சுரேஷ் -

முஸ்லீம்களின் ஏகாதிபத்தியம் முறியடிக்கப்பட வேண்டும் எனில் தமிழ் மக்கள் மஹிந்தவுடன் இணைய வேண்டும் என விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்கள் தனது செல் பி காணொளி மூலமான பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார், 

"நாம் கூறியவாறு மஹிந்த மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளார். வடக்கிலும் நாம் நமது சேவைகளை விஸ்தரிக்கவுள்ளோம். தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு முஸ்லீம்களுக்கு அதிகார, காணி ஏகாதிபத்தியங்களை வழங்கியுள்ளது. இந்நிலையை உடைத்தெறியவேண்டும். த.தே.கூ மஹிந்தவுடன் இணைந்து செயற்பட வேண்டும்" எனவும் வேண்டிக் கொண்டார். 

கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் மீது சமீப காலமாக கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயக மூர்த்தி முரளீதரன் அவர்கள் விஷமத்தனமாக கருத்துக்களை கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும் 

Post a Comment

0 Comments