Comments System

header ads

வாழைச்சேனை முஸ்லீம் பிரதேச சபைக்கு முன்னுரிமை கொடுங்கள் ; அன்வர் நௌஷாத்



அரசியல் பேரம் பேசும்தலைமைகள்  முஸ்லிம்களின்  தேவைப்பட்டியலில் கோறளைப்பற்றுமத்தி  (வாழைச்சேனை) பிரதேச சபையையும்,  ஓட்டமாவடி  பிரதேசபை யுத்த காலத்தில்  இழந்த  காணிகளை  மீள வழங்கப்பட  வேண்டும் என்கின்ற  கோரிக்கைகள் முன்னிலைப்படுத்தப்  பட வேண்டும் என CASDRO அமைப்பின் தலைவர்  அன்வர் நௌசாத் தெரிவித்தார்.

"அரசியல் அசாதாரண சூழ்நிலை ஒன்றினை அனுபவித்துக்  கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் தமது நலன் சார்ந்த விடயங்களை பேசுவதற்கான சாதகமான சூழ்நிலை ஒன்று தோன்றியுள்ளது. 

அசாதாரண நிலையை தவிர்த்து ஸ்திரமான ஆட்சி ஒன்றினை தோற்றுவிக்கும் பலம் முஸ்லீம் தலைமைகளிடம் உள்ளது. இப்பேரம் பேசும் சந்தர்ப்பத்தில் சமூகம் சார்ந்த பல விடயங்கள் முன் வைக்கப்படுகின்றன. இதில்  கல்குடா தொகுதி  முஸ்லீம்களின்  பிரச்சனைகளுள்  மிக  அவசரமானது  கோறளைப்பற்று  ம த்தி  (வாழைச்சேனை ) பிரதேச சபையாகும் .   
இச்சமூகத்தில் பல தேவைப்பாடுள்ள போதிலும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சனத்தொகையினையும் 25 ஆயிரம் வாக்காளர்களையும் , தேவையான நிலத்தையும் கொண்டுள்ள ஒரு மக்கள் தொகுதிக்கு அவர்களுக்கு தேவையாகவுள்ள அடிப்படை நிர்வாக அலகை வழங்க அனைத்து தரப்பும் முன் வர வேண்டும்.

அத்துடன்  பயங்கரவாத  சூழலில் எமது ஓட்டமாவடி பிரதேச  சபையில்  இருந்தும் பிரித்தெடுக்கப்பட்ட  நிலங்கள் மீளவும் எமக்கு வழங்கப்பட  வேண்டும் நீண்ட காலமாக எமது  வளங்கள் சுரண்டப்படுகின்றன. வயற்காணிகள்,  குளங்கள், மேய்ச்சல்தரை  குடியேற்ற நிலங்கள் என்பன எம்மிடம் இருந்து தட்டிப்பறிக்கப்பட்டுள்ளன இவற்றை  மீளவும் பெற்று தரப்படல்  வேண்டும் என்பதே நமது அடிப்படை கோரிக்கையாகும். 

சாத்தியமற்ற சில தேவைகளுக்காக எமது மக்களின் தேவைகளை முன் வைக்க தவறுகின்றனர். சிலர் தமது தனிப்பட்ட அரசியலுக்காக எமது தேவைகளை புறக்கணிக்கின்றனர். நாம் நமது எதிர்காலத்திற்காக போராட வேண்டியுள்ளது, இந்நிலையில் எமது சமூகத்தின் குரலாக எந்த இடத்தில் ஒலிப்பதற்கும்  நாம் தயாராக இருக்கின்றோம். 

எமது கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய தரப்புக்களோடு சேர்ந்து செல்வதே மிகப் பொருத்தமானது. எப்பக்கம் சார்வதாயினும் எமது மக்களின் தேவைகளை முன்னிலைப்படுத்துங்கள் என உருக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம் "எனவும் வேண்டுகோள்  விடுத்தார். 

Post a Comment

0 Comments