Comments System

header ads

அ.இ.ம.கா அதிரடி முடிவு


அ.இ.ம.கா கட்சி தற்போது மஹிந்த ராஜபக்ச அவர்களுடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடவுள்ளதாக உத்தியோகப் பற்றற்ற செய்திகள் தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் அவசர கூட்டம் ஒன்றின் மூலமாக தமது பாராளுமன்ற ஆதரவை ஆராயும் கட்டாயத்துக்கு அ.இ.ம.கா தள்ளப்பட்டுள்ளதாகவும்  அறியக்கிடைக்கின்றது. விசேடமாக அ.இ.ம.கா வின் இரண்டாம் தலைமை மஹிந்த தரப்பை முற்றாக நிராகரிப்பதாகவும் ஏனையவர்கள் எவ்வித மறுப்பினையும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. 

அத்துடன், முஸ்லீம்களின் பிரச்சனைகள் சிலவற்றை முன்னிலைப்படுத்தும் ஆயத்தங்களும் இடம்பெற்று வருதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 


அதேவேளை, மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் சந்திப்பொன்றை மேற்கொண்ட தமிழ் முக்கிய பாராளுமன்ற குழு தாம் மஹிந்த அணியினருக்கு சார்பு நிலை எடுப்பதாயின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சை தமக்கு வழங்க வேண்டும் என வேண்டிக்கொண்டுள்ளனர். மஹிந்த தரப்பு அதனை முற்றாக மறுப்பு தெரிவித்துள்ளதுடன் ராஜாங்க அமைச்சு ஒன்றை தருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 



Post a Comment

0 Comments