Header Ads

Breaking News

பாராளுமன்றம் கலைக்கப்படும் ; அமைச்சர் விஜேதாச


எதிர்வரும் 16 ம் திகத்திக்கு முந்திய பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணனி தோற்கடிடிக்கப் படுமாக இருந்தால் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிதாக பதவியேற்றுள்ள அரசாங்கம் மூன்றுமாத காலத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை செய்துகொள்வதும், அதனோடு இணைந்த பிரேரணைக்கான ஆதரவு பெரும்பான்மையை  பாராளுமன்றில் காண்பிக்கத் தவறும் பட்சத்தில் பாராளுமன்றை கலைத்து விடுவதற்கு ஜனாதிபதிக்கு 19ம் திருத்தத்தின் பின்னரும் அதிகாரம் இருப்பதாகவும், இது வெஸ்ட் மினிஸ்டர் (WESTMINISTER ) முறையிலும் உள்ள பாரம்பரியம் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த அரசில் அங்கம் வகித்து தற்போதைய அரசிலும் கல்வி உயர்கல்வி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments