கிழக்கின் அரசியல் போட்டி;முஸ்லீம்கள் எதை நோக்கி பயணிக்கின்றார்கள் ??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, October 1, 2018

கிழக்கின் அரசியல் போட்டி;முஸ்லீம்கள் எதை நோக்கி பயணிக்கின்றார்கள் ???


அம்பாறை மாவட்ட முஸ்லீம்கள் மீதான எதிர்பார்ப்பு அரசியல் ரீதியில் மிக முக்கியமானவை. பிரதானமாக முஸ்லீம் காங்கிரசின் கோட்டை என வர்ணிக்கப்படுகின்ற பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை தொகுதிகளை அடிப்படையாக கொண்டே இலங்கை முஸ்லீம்கள் தமது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கின்றனர், அதனாலேயே முஸ்லீம் அரசியல் கடசிகள் தமது மக்கள் பிரதிநிதிகளை அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் பெற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளீர்க்கப்படுகின்றனர். 

இந்நிலையில் கௌரவ . ரிஷாத் பதுர்தீன் தலைமையிலான அ.இ.ம.க அம்பாறை அரசியல் பிரவேசம் என்பது மிக வேகமானது என்றே வர்ணிக்கலாம். அதேவேளை முஸ்லீம் காங்கிரசில் இருந்து நேரடியாக கட்சியை வழிநடாத்திய இரண்டாம் நிலை தலைமைகள் விலகி, அ.இ.ம.க வுடன் தம்மை இணைத்துக்கொண்டுள்ளன. கடந்த உள்ளுராட்ச்சி தேர்தல் இவ் விலகளின் விளைவுகளை தெளிவாக இனங்காட்டியுள்ளது. 

பலத்த பின்னடைவை மு.கா மீது திணிக்க முயலும் தேசிய பெரும்பான்மை வாதிகளுக்கு, ஏற்கனவே அம்பாறையில் இருந்து வந்த அதாவுல்லா அணிக்கான ஆதரவினை மக்கள் காங்கிரசுக்கு வழங்குவதில் தடையேதும் இல்லை. எது எவ்வாறாயினும் முஸ்லீம் காங்கிரஸுக்கான மாற்று அணி ஒன்றினை நிலை நிறுத்தும் சதி தொடர்ந்து கொண்டே இருக்கும். 

மட்டக்களப்பில் அகலக் கால் ஊன்றியுள்ள அ.இ.ம.க அங்குள்ள முஸ்லீம் மக்களின் நலனில் ஒரு வீதம் தானும் கொள்ளவில்லை. அமைச்சுக்கள் மூலமான அரசு நிதி பிரிப்புக்கள் தமிழ் முஸ்லீம் மக்களிடையே பகிர்ந்தளிக்கப்படுகின்றன தவிர வேறெதுவும் இடம்பெறவில்லை. முஸ்லீம்களின் இனங்காணப்பட்ட எந்தப் பிரச்சனையும் தீர்த்து வைக்கப்படவில்லை . அல்லது அவர்களால் இயலாமல் உள்ளது என்றே கூற வேண்டியுள்ளது. 

இந்நிலையில் திருகோணமாலையிலும் இது தொடர்கிறது. முஸ்லீம்களின் பெரும்பான்மை கிழக்கில் முஸ்லீம் காங்கிரஸினை அழித்து ஆக்கிரமிக்க துடிக்கும் அ.இ.ம.க வின் முஸ்லிம்களுக்கான தீர்வுதான் என்ன.? இதுவரைக்கும் எங்கும் அது பிரஸ்தாபிக்கப்பட வில்லையே. ? அவ்வாறு பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பின் அதற்கான முன்னெடுப்புக்கள் எவ்வாறு நகர்கிறது. ? உரிமைகளை நோக்கிய எந்த அபிவிருத்தியை முன்னெடுத்திருக்கின்றார்கள்.? 

முஸ்லீம் சகோதரத்துவ உணர்வுடன் சிந்திக்கின்ற ஒவ்வொருவருக்கும் விளங்கும் உண்மை, முஸ்லீம் காங்கிரஸ் தனது பாதையில் சறுக்கல்கள் கண்டாலும் இலக்குடன் பயணிக்கும் கடசி என்பதே 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages