Comments System

header ads

ஜனாதிபதி மைத்திரியின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்



ஜனாதிபதியின் அதிரடி முடிவினால் அதிருப்தியடைந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலுள்ள பலர் சுயாதீனமாக செயற்படபோவதாக வெளியான தகவல்கள் உண்மையானவை அல்ல என சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணி தெரிவித்துள்ளது.
கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளரின் சந்திப்பின் போதே சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு கருத்து தெரிவித்த சாந்த பண்டார,
“இலங்கையின் அரசியலமைப்பிற்கு அமைய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே சுதந்திர கட்சியினரும் பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்திருக்கும் முடிவு அரசியலமைப்பை மீறும் வகையில் அமையவில்லை 
பலதரப்பட்ட நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டே நாட்டை எண்ணி ஜனாதிபதி இந்த முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் நாட்டின் நெருக்கடி நிலைமையை போக்குவதற்கு மைத்திரிபால சிறசேன எவ்வாறு பொது வேட்பாளராக களமிறங்கினாரோ அவ்வாறே தற்போதும் செயற்பட்டுள்ளார்.
அத்துடன் நாளை(இன்று) நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பது தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும்.” என்று தெரிவித்தார்

Post a Comment

0 Comments