Comments System

header ads

சிறுபான்மைக் கட்சிகள் யார் பக்கம்


ற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கலந்துரையாடி வருவதாகவும், இன்று அதிகாலை கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் முன்னிலையில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாகவும்  அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்தார்.

அதேவேளை , அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பாக நாளைய தினம் (27) பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாவை சேனாதிராசா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இதே போன்று, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரும் தேசிய ரீதியாக எழுந்துள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் தற்போது விவாதித்து வருவதாக மனோ கணேசன் தகவல் வௌியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments