Comments System

header ads

சம்பந்தர் மஹிந்தர் சந்திப்பு



தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை இன்று சந்தித்துள்ளார்.
கொழும்பு விஜயராம வீதியிலுள்ள மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (30) காலை இந்தச் சந்திப்பு நடைபெற்றதாகக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சார்பில் இரா. சம்பந்தன் மாத்திரமே இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்ததாகவும் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரின் பாராளுமன்றக் குழு இன்று கூடுகின்றது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று பகல் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments