Header Ads

Breaking News

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் நடவடிக்கையில் தடை


கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் சேவை யாப்பு இதுவரை நிறைவேற்றப்படாதமையால், ஆணைக்குழுவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதில் தடை ஏற்பட்டுள்ளதாக, கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டு 3 மாதங்கள் கடந்துள்ளபோதிலும், இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன் கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் சட்டத்திற்கு அமைய, யாப்பு நாளை நிறைவேற்றப்பட வேண்டும் என கணக்காய்வாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு, ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அந்த நடவடிக்கை இதுவரை நிறைவு செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments