Comments System

header ads

அர்ஜுனாவின் பாதுகாப்பு அதிகாரி சுட்டதில் ஒருவர் மரணம், இருவர் படுகாயம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தெமடகொட தலைமையக வளாகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தலைமையக வளாகத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில், வளாகத்திற்குள் நுழைந்த மற்றுமொரு குழுவினர் அர்ஜுனாவின் பிரவேசத்திற்கு எதிராக அமைதியின்மையை தோற்றுவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு அதிகாரியொருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்தனர். துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட பாதுகாப்பு அதிகாரி பின்னர் கைது செய்யப்பட்டார்.

Post a Comment

0 Comments