Comments System

header ads

மஹிந்தவா ? ரணிலா ? முஸ்லிம்களின் தெரிவு யார்


-அபூ ஜாஸி -
பிரதமர் பதவிக்காக ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி அறிவிப்பு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருந்தாலும் சமூகத்தின் நலன் குறித்த சிந்தனையாளர்களுக்கு பாரிய சவாள்கொண்டதாகவே இது அமைந்துள்ளது. 

ஒரு பிரதமர் பதவியை வரிதாக்கி இன்னொரு பிரதமர் நியமனம் என்பது ஜனாதிபதி மைத்ரி மீதான சில விமர்சனங்களையும் கோப அலைகளையும் சிலரிடையே தோற்றுவித்துள்ளது. அதேவேளை முன்னாள் பிரதமர் ரணில் மீதான அனுதாப மனோநிலையையும் வெளிக்காட்டியுள்ளது. இருப்பினும் இவ்வரசாங்கம் தொடர்பிலான முஸ்லீம்கள் நலன் தொடர்பிலாக பெரிதும் அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டிய தேவை இருப்பதாக முஸ்லீம்  சமூக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஜனாதிபதி தேர்தல் ஆதரவு தொடர்பிலும் முஸ்லீம் கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவு தொடர்பில்  சிலாகிக்கப்பட்டது. பின்னர் மைத்ரி - ரணில் தொடர்பில் முஸ்லிம்கள் பெரிதும் அதிருதியான நிலைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். 

இந்நிலையில் மீண்டும் ஒரு தருணம் முஸ்லீம் மக்கள் முன்னே கிடைத்திருக்கின்றது. இதில் எவ்வாறேனும் 10 மாதங்களுக்கு குறையாத காலத்துக்கு நீடிக்கப்போகும் இப்பாராளுமன்றின் முன்னே முஸ்லீம்களின் தேவைகள் நீண்டு செல்கின்றன. 

அதேவேளை, ரணிலுக்கு   நன்றி செலுத்தும் படியாக எதையுமே அவர் செய்திடவில்லை.
  • முஸ்லீம்களின் பாதுகாப்பு தொடர்பில் - தொடரும் அச்சுறுத்தல் 
  • பொருளாதார இடைஞ்சல்கள் 
  • காணி விவகாரங்கள் தொடர்பில்  தொடரும் சிக்கல்கள் 
  • அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் 
  • தேர்தல் முறைமை மற்றும் மாகாண எல்லை நிர்ணயம் 

என நீளும் கழுத்தறுப்புக்கள் அநேகம், முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் என்பன உள்ளுராட்ச்சி தேர்தல் முடிவுகளையும், அவற்றுடன் ஆட்சியமைப்பதற்கான நயவஞ்சகத்தனம் தொடர்பிலும் பெரிதும் ஞாபகம் கொள்ளவேண்டியுள்ளது. 

அம்பாறை மாவட்ட முஸ்லீம்களின் மாயக்கள்ளி மலை விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்  தாயா கமகே மற்றும் பூரண முஸ்லீம் விரோத கொள்கை கொண்ட  பாட்டாளி சம்பிக்க ஆகியோரை உள்ளடக்கியுள்ள நிலையில் முஸ்லீம் ஆதரவு கட்சியாக ஐ.தே.க வினை முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை. உள்ளுராட்ச்சி தேர்தலில் ஐ.தே.க வில் களமிறங்கிய கட்சிகளை முஸ்லீம்கள் எந்தளவு ஒதுக்கினார்கள் என்பதையும் ஞாபகம் கொள்ளவேண்டியது கட்டாயமாகும்.

மஹிந்த தரப்பு முன்னர் முஸ்லீம்கள் மீதான கடும் போக்கினை கொண்டிருந்தது உணரப்பட்டது. இருப்பினும் ரணில் -மைத்ரி அரசாங்கம் அதற்க்கு ஒரு mm எனும் குறைந்ததல்ல. 

அமித் வீரசிங்க, ஞானசார, மற்றும் இத்யாதிகள் தாண்டி நமது சமூகத்தின் எல்லைகளை விஸ்தரித்து நமது மக்களை பாதுகாக்கும் ஒரு கேடயமாக நாம் மாறவேண்டியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக வெட்டி விமர்சனங்களில் இருந்தும் விடுபட வேண்டியுள்ளது. 

மஹிந்த - ரணில் இருவரில் எவரால் நமது தேவைகளில் அநேகமானவற்றை நிறைவேற்ற முடிகிறதோ ? அவர்தான் இந்த காலத்துக்குரிய பிரதமர்.  சமூகத்தின் ஆழமான பற்றுதல் இது . ஆகவே எவருக்காகவும் நமது இலக்குகளை மாற்றிக் கொள்ளாமல் சமூகத்தின் மீதான விசுவாசத்திற்காக மட்டுமே பயணிக்க வேண்டிய தருணம் மஹிந்த- ரணில் -மைத்ரி என்று எல்லோரிடமும் நமது சிக்கல்களை முன் வைத்து அவிழ்ப்பவரின் பின் தொடர வேண்டும் என்பதே இந்த சமூகத்தின் அவா ..













Post a Comment

0 Comments