Header Ads

Breaking News

ஒலுவில் துறைமுகத்தில் என்ன நடக்கிறது ; துறைமுகத்தின் உள்ளே பரபரப்பு கூட்டம்


ஒலுவில் துறைமுக விவகாரம் சூடு பிடிப்பு ; பரபரப்பு கூட்டம் 

ஒலுவில் துறைமுக நுழைவாயில் கடலால் மூடப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட  அரசியல் கலந்துரையாடல்களின் விளைவாக இன்று ஒலுவில் துறைமுகத்திற்கு கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அழைப்பின் பேரில் கௌரவ கப்பல் துறைமுகங்கள்  அமைச்சர் மஹிந்த சமரசிங்க விஜயம் செய்தார். 

ஒலுவில், மற்றும் நிந்தவூர் மக்களின் வேண்டு கோள்களினை கருத்திற் கொண்டும் மீனவர்களின் வேண்டுகோள்களினை கவனத்திற் கொண்டும் நிரந்தர தீர்வொன்றினை பெற்றுக் கொள்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் நிரந்தர தீர்வொன்றினை பெற்றுக் கொள்ள சுமார் 3500 மில்லியன்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் தற்காலிக தீர்வினை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது. 

No comments