Comments System

header ads

சம்பந்தன், ரவூப் ஹக்கீம், ரிஷாத், மனோ ஆகியோர் ரணிலுக்கு ஆதரவு


முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஏனைய சிறுபான்மைக் கட்சிகளின் உதவியுடன் மீண்டும் ரணில் பிரதமராவதற்குரிய சந்தர்ப்பத்தை தற்போது அலறி மாளிகையில் கலந்துரையாடிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அலறி மாளிகையில் சற்று முன் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐ.தே . மு. முக்கியஸ்தர்கள் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர். 

பாராளுமன்றத்தில் அறுதி பெரும் பான்மையை நிரூபிக்கும் நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ், மலையக முற்போக்கு முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன தொடர்ந்தும் தமது ஆதரவை ரணிலுக்கு வழங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிபந்தனையற்ற இந்த ஆதரவு பலத்த ஆட்ஷேபனைகளை மக்கள் மத்தியில் வெளிக்கொணரும் என்பதால் எவ்வாறான நிபந்தனைகளை ஐ.தே .க விடம் சமர்ப்பிக்கலாம் என்பது குறித்து ஆய்ந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Post a Comment

0 Comments