Comments System

header ads

ஹாரிஸ் எம்.பி சமூகத்திற்காக செய்த தியாகங்களை மீண்டும் செய்ய வேண்டும் - கிழக்கு இளைஞர் பேரவை

ஹரிஸ் எம்.பி சமூகத்தின் தேவைக்காக எவ்வாறான முடிவினை எடுத்தாலும் அதற்காக நாம் பலமான ஆதரவினை வழங்குவோம் என கிழக்கு முற்போக்கு இளைஞர் பேரவையின் செயலாளர் எச்.எம்.எம். குறைஷ் தெரிவித்துள்ளார். 

"கிழக்கு மக்கள் பல்வேறு சவால்களுடன் போராடிவருகின்றார்கள் அவர்களின் பிரச்சனைகளை மிகத் தெளிவாக புரிந்து கொண்ட ஒருவரே ஹரிஷ் எம்.பி. சமூகத்தின் எல்லா தளத்திலும் நின்று போராடியவர். இன்று சமூகத்திற்கு தலைமை தாங்கும் தகுதி அவருக்கு உள்ளது. 

மேட்டுக்குடி அரசியலை விடுத்து சமூகத்தில் ஏழை மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்த அவரால் முடியும். 

புதிய பிரதமருக்கு ஆதரவளிப்பதன் மூலம் சமூகத்தின் தேவைகளை வென்று கொள்ள முடியும் எனின் அதற்காக அவர் பின்நிற்க கூடாது அத்தோடு இது அவர் சமூகத்திற்காக செய்யும் தியாகமும் கூட எனவும் அவர் மேலும் கூறினார். மஹிந்தவுக்கு நாட்டின் எல்லா பாகங்களிலும் ஆதரவு அதிகரித்து வருவதையும் எதிர்வரும் தேர்தல்களை கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார். 

Post a Comment

0 Comments