எமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, October 5, 2018

எமது தரம் 5 மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ; ஏ.எல்.எம்.நசீர், எம்.பி



இன்று வெளியான தரம் ஐ ந்தாம் வகுப்பு  புலமைப்பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த   மாணவச் செல்வங்களுக்கு எனது உள்ளம் கனிந்த  நல்வாழ்த்துக்கள்.

விஷேடமாக இதற்காக கூடுதலாக அக்கறை செலுத்திய குறிப்பாக  ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்றோர்களுக்கு எனது நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன். 

இம்  மாணவச் செல்வங்களின்    எதிர்காலம் சிறப்பாக அமைய வல்ல இறைவனிடம் எனது  பிராத்தனைகள். 
விஷேடமாக இப்பரீட்சை பெறுபேறு களை கொண்டு  மாணவர்களை  துவண்டு போகவிடாமல், மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த கூடுதலான  பங்களிப்பினை  வழங்குமாறு பெற்றோரிடம் வினயமாக  கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் வெட்டுப்புள்ளியை எய்து  வெற்றியடைந்த மாணவர்கள்  இவ் வெற்றியோடு  தமது கல்வியில் ஆர்வத்தை குன்ற விடாமல் தற்போது உள்ள அதே உற் சாகத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும். 

குறிப்பாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் வெட்டுப்புள்ளியில் மிக கூடுதல்  சராசரிப்  புள்ளி  பார்க்கப்பட்டுள்ளது அதன் இதன் பிரகாரம் குறைந்த பட்சம் 81 புள்ளிகளுக்கு  மேல் பெற வேண்டியுள்ளது. இதனை கல்வி அமைச்சர் அகிலவிறாஜ் காரியவசமிடம் நேரடியாக சந்தித்து இது தொடர்பில்  சுட்டிக்காட்டவுள்ளேன் என்பதையும் குறிப்பிடுகிறேன். 

கௌரவ அல்ஹாஜ் ஏ.எல் முஹம்மட் நசீர் பா.உ

பொது நிர்வாக முகாமைத்துவம் மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஒருங்கிணைப்பாளர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages