Breaking News

SLMC -பொத்துவில் பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக B.வசூர்கான் JP


SLMC இன் பொத்துவில் பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக B.Basoorkhan JP அவர்கள் தேசிய தலைவரினால் நியமனம்.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுக் கூட்டம் கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று (15) பொத்துவிலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அம்பாறை மாவட்ட செயற் குழு உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸ் தேசிய செயற்பாட்டு உறுப்பினரும் சாமாதான நீதவானுமாகிய வுஹாரிதீன் வசூர்கான் பொத்துவில் பிரதேச இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளராக தெரிவு செயற்பட்டார்.
இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், பிரதியமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் அப்துல் வாசித், கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
--------------------------------------------------------

இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரின் நன்றிகள்- குறித்த கட்சியின் பதவிக்கு என்னை தெரிவு செய்த கட்சியின் தேசிய தலைவர்க்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளர் Aarif Samsudeen law, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் தவிசாளர் MSA.Wazeeth, குறிப்பாக விடாப்பிடியாக சபையில் எழுந்து இப்பதவிக்காக பிரேரித்த கௌரவ உறுப்பினர் MH.Abthul Raheem, கட்சியின் எதிர் கால அரசியல் தலைமை சட்டதரனி Faizal Muhaideen, கட்சியின் மா.செ.உறுப்பினர்கள், பி.ச உறுப்பினர்கள், பொத்துவில் பிரதேச இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் போராளிகள் அனைவருக்கும் இவ் வேளையில் நன்றிகளை தெரிவிக்கின்றேன்.

No comments