டொலருக்கெதிராக ரூபாவின் வீழ்ச்சி ; நிதியமைச்சு அறிக்கை

ஆசிய வலயத்தைச் சேர்ந்த ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் மதிப்பிறக்கம் குறைந்த மட்டத்தில் உள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதத்திற்குப் பின்னர் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபாவின் பெறுமதி 6 சதவீதத்தால் மாத்திரமே குறைந்துள்ளது. எனினும், இந்திய ரூபாவின் பெறுமதி 11 சதவீதத்தால் குறைந்திருக்கிறது.
இதற்கான காரணம் உள்நாட்டுக் காரணிகள் அல்ல. வெளிநாட்டுக் காரணிகளே என மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் நந்தலால் வீரசிங்ஹ தெரிவித்துள்ளார்.
நாணய மதிப்பிறக்கம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதுவித புரிந்துணர்வையும் கொண்டிருக்கவில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இது பற்றி முன்னாள் ஜனாதிபதியுடன் விவாதத்திற்குத் தயாரென என அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி காரணமாக ஏனைய நாடுகளின் நிதி அலகுகள் மதிப்பிறக்கம் கண்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்ஹ தெரிவித்துள்ளார்.
நாணய மதிப்பிறக்கம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முன்வைக்கும் தர்க்கங்களை தாம் நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாரச்சி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments