சுய தேவைக்காக வசைபாடுபவர்களை மு.கா தூரப்படுத்த வேண்டும்; தமீம் ஆப்தீன் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 19, 2018

சுய தேவைக்காக வசைபாடுபவர்களை மு.கா தூரப்படுத்த வேண்டும்; தமீம் ஆப்தீன்



நசீர் எம்.பியின் அரசியல் நடவடிக்கைளை உற்று நோக்குபவர்களுக்கே  அவரின் மனிதாபிமானம் விளங்குகின்றது என பிரதேச சபை உறுப்பினர் தமீம் ஆப்தீன் தெரிவித்தார். 

பதவிகள் மற்றும் அதிகாரங்களுக்கு அப்பால் மனித நேய சேவைகளை தனது சொந்த முயற்சியின் ஊடாக நசீர் எம்.பி செய்து வருகின்றார். இருப்பினும் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சில பதவி ஆசை கொண்டவர்களின் கண்களுக்கே அவர் விமர்சன ரீதியில் தென்படுகிறார்.

அட்டாளைச்சேனை மண்ணுக்கு 35 வருடங்களுக்கு பின்னர் கிடைத்துள்ள இப்பதவியை காப்பாற்ற அல்லது மக்களுக்கு சேவைகளை செய்ய மிகப் பொருத்தமான தெரிவு நசீர் எம்.பி யேயாகும். ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைமை மிக பொருத்தமான தெரி வையே  செய்துள்ளது. தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு நன்றி சொல்ல எமது மக்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.

கடந்த உள்ளுராட்ச்சி தேர்தலிலும் இப்போதும் மு.கா வுக்கு எதிராக செயற்பாட்டு வருபவர்கள் இன்று எமது கட்சியையும் அதன் சலுகைகளையும் அனுபவிக்க முண்டியடிப்பது மிக அபத்தமானது கட்சியின் தலைமை இவர்களின் உள்நோக்கங்களை புரிந்து கொள்ளவேண்டும், இவ்வாறானவர்களை மக்கள் இனங்கண்டுள்ளார்கள். மக்களின் சேவைகளை குழப்பும் இவர்களை மக்கள் தம்மை விட்டும் ஏற்கனவே தூரப்படுத்தி விட்டார்கள், மேலும் தூரப்படுத்துவார்கள் எனவும் தெரிவித்தார். எனவும் தெரிவித்தார்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages