Header Ads

Breaking News

அரசியலாகும் ஒலுவில் துறைமுகம் !!!


"அதேவேளை அரசியல் மும்முரத்தில் தமது மக்களின் நலனையும் இணைத்து அதற்காகவும் இவர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும்  என்பதே நமது எதிர்பார்ப்பு "

ஒலுவில் துறைமுகமானது மீண்டும் ஒரு முறை தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள பெரும் பிரயத்தனம் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. 

அம்பாறை மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி பிரதேசங்களான கல்முனைக்குடி, சாய்ந்தமருது, பொத்துவில் போன்ற பிரதேசங்களில் இருந்தும் தென் மாகானத்தின் பெரும் படகுகளும் தரித்துச் செல்லும் ஒரு படக்குத் துறையாகவே ஒலுவில் துறைமுகம் இன்று வரை இயங்கி வருகின்றது. 

இந்நிலையில் தற்போது மாறிவரும் காலநிலைக்கேற்ப மீண்டும் துறைமுக நுழைவாயில் மண் சூழப்பட்டு கடற்பாதை முற்றாக இயற்கையாக தடுக்கப்பட்டுள்ளது. இப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளுக்கான பாதுகாப்பு மற்றும் மீன் வியாபாரம் என்பன கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்திலுள்ள மீனவ சமூகம் பெரிதும் பாத்திக்கப்பட்டுள்ளது.

இந்நிலையை கவனத்திற்கொண்டு பல அரசியல் கட் சிகளும் முண்டியடித்து மண் மேட்டை தூண்டுவதில் மும்முரம் காட்டின. வழமை போன்று மு.கா தடுத்ததாக அ.இ.ம .க ஆதரவாளர்கள் கூச்சலிட்டார். பிரதேசத்திலுள்ள அ.இ.ம.க முக்கியஸ்த்தர்கள்  துறைமுகப் பிரச்னையை தீர்க்க அமைச்சர் ரிஷாத் மூலமாக 5 மில்லியன்களை தமது பொக்கற்றுக்குள் வைத்துக்கொண்டு உலா வருவதாகவும் கதைகள் வெளிவந்தன. சமூக அக்கறை என்றால் இதுவல்லவா ???

இதேவேளை, கடந்த ஞாயிறன்று ஒலுவில் பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தின் அழைப்பின் பேரில் கலந்துரையாடலுக்கு சென்ற பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடமம் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் அவர்களிடமும் ஒலுவில் மக்கள் காரசாரமாக தமது ஆதங்கங்களை வெளிக்கொணர்த்துள்ளனர்.

01. ஒலுவில் துறைமுகத்தில் மண் அகழ்வதாயின் அது எமது ஊரை அழி ப்பதற்கு சமமாகும்.
02. துறைமுகப்பகுதிக்கான மாற்று நிலம் வழங்கப்படல் வேண்டும்/ நிவாரணம் வழங்கப்படல் அவசியம்.
03. அனுமதிக்கப்பட்ட நிலங்களை மக்களுக்கே பகிர்ந்தளித்தல்
மேலுள்ள மக்கள் ஆதங்கங்கள் அப்படியே ஒப்புவிக்கப்பட்ட வேளை, மீண்டும் சிலர் (அரசியல் தலைமைகள் ) காணாமல் போயுள்ளனர்.

அதாவது மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதெனரால் பிறிதொரு பிரச்சனைக்கான ஆரம்பத்தை தோற்றுவிக்காத தீர்வினைப் பெற்றே நாம் நமது முன் மொழிவினை செய்ய வேண்டும்.

என்ன எதிர்பார்ப்போடு ? எவ்வாறானதொரு நிகழ்ச்சி நிரலுக்காக இத் துறைமுகம் நிர்மாணிக்கப் பட்டதென்பதை மறந்து நாமே இத்துறைமுகத்தை மூடிவிடுங்கள் எனும் நிலைக்கு வருமளவுக்கு நாம் மீதான திணிப்பு நகர்த்தப் பட்டிருக்கின்றது.

துறைமுக மண் அகழ்விற்க்காக பைக்கெற்றுக்குள் காசு வைத்திருந்தவர்கள் இப்போது எங்கே. ??? உடனடியாக மக்களை அழைத்துப் பேசியவர்கள் எங்கே ? அவ்வாறே ஒலுவில் மக்களின் கடலரிப்புக்கும் தொடர்ச்சியான தீர்வொன்றினை பெற்றுக் கொள்வதில் என்ன தடங்கல் அவர்களுக்குள்ளது ??? வெளிப்படையாக பேசுவோம் வாருங்கள் .

மீண்டும் மீண்டும் வாய்ச்சவடால்களால் மக்களை ஏமாற்றும் பணியினை விட்டும் மேற்பட்ட அரசியல் கலாசாரம் ஒன்றினூடாக மக்களைக் காக்க நாம் இப்பிராந்தியத்திலுள்ளவர்கள் ஒன்றிணைய வேண்டும். அதற்காக நாம் எந்தவொரு அர்ப்பணிப்பையும் செய்ய தயாராக இருப்பதாகவே மக்கள் உணர்கின்றார்கள்.

"அதேவேளை அரசியல் மும்முரத்தில் தமது மக்களின் நலனையும் இணைத்து அதற்காகவும் இவர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டும்  என்பதே நமது எதிர்பார்ப்பு "
No comments