இனங்களுக்கிடையிலான உறவை அரசியல் ரீதியில் மீளக் கட்டியெழுப்பி காட்டினோம் - நஸீர் அஹமட் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, September 25, 2018

இனங்களுக்கிடையிலான உறவை அரசியல் ரீதியில் மீளக் கட்டியெழுப்பி காட்டினோம் - நஸீர் அஹமட்


யுத்தத்தினால் சீர்குலைக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்ட  இனங்களுக் கிடையிலான உறவை அரசியல் ரீதியாக எவ்வாறு மீளக் கட்டியெழுப்ப முடியும் என்ற வரலாற்றை கிழக்கு மாகாண சபையின் மூலம் செய்து காட்டினோம் என முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர், தளவாய்க் கிராமத்தில் அதி நவீன ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 
எமது ஆட்சியில் எவரும் வஞ்சிக்கப்படாதது ஒருபுறமிருக்க மக்கள் நிம்மதியை அனுபவித்தார்கள். அபிவிருத்தியின் பலாபலன்களை அடைந்து கொண்டார்கள்.
30 வருட யுத்தத்தால் ஏற்பட்ட சமூகங்களுக்கிடையிலான பிரிவினையை சுமார் இரண்டரை வருடத்தில் இணைத்தோம். யுத்தத்தக் காரணம் காட்டிக் கொண்டோ அல்லது அரசியலைக் காரணம் காட்டிக்கொண்டோ நாங்கள் ஒருபோதும் இன ரீதியாகப் பிரிந்திருக்க முடியாது.
தொழில் மூலம் ஒன்றிணைந்து வாழலாம் என்பதை எமது தொழிற்சாலைகளில் தமிழ்,முஸ்லிம், சிங்களம் உட்பட அனைத்து சமூகங்களுக்கும் வாய்ப்புக் கொடுத்ததன் மூலம் இதனை மெய்ப்பித்துக் காட்டினோம்.
நாம் திருகோணமலை சம்பூர் பகுதியிலும் அம்பாறை நாவிதன்வெளிப் பகுதியிலும் மூவின மக்களையும் இணைத்து வேலைவாய்ப்பளிப்பதற்காக ஆரம்பித்து முடிவுறுத்தப்பட்ட தொழிற்சாலை எமது மாகாண சபை நிருவாகம் முடிந்ததன் பின்னர் இன்றுவரை திறக்கப்படாமலிருப்பது கவலையளிப்பதாக உள்ளது.
அத்தொழிற்சாலைகளை தொழில் வாய்ப்புக்காக திறந்து இளைஞர் யுவதிகளிடம் ஒப்படைக்கின்ற திராணியற்றதாக மாகாண நிருவாகம் இருந்து கொண்டிருக்கின்றது.
கடந்த கால யுத்தத்தில் அனைத்தையும் இழந்து குடும்பங்களைப் பிரிந்து வேதனையை அனுபவித்த கிழக்கு மாகாண பெண்கள் பணிப் பெண்களாக வெளிநாடு செல்வதை நிறுத்திக் காட்டினோம். இதேபோல் இன்னும் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது. இதனை அரசியல்வாதிகள் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages