பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விஷேட பயிற்சி ? நாலக சில்வா - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, September 30, 2018

பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விஷேட பயிற்சி ? நாலக சில்வா


ஜனாதிபதி உட்பட முக்கிய பிரமுகர்களை கொலை செய்ய திட்டமிட்டார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள பிரதிபொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா பயங்கரவாத விசாரைணை பிரிவிற்குள் விசேட படையணியொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயங்கரவாத விசாரணை பிரிவை சேர்ந்த குழுவொன்றிற்கு கொமாண்டோ பயிற்சிகளை வழங்குவதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என நாலக டி சில்வா பொலிஸ்மா அதிபரிடம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர்களிற்கு நவீன ஆயுதங்களை வழங்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்  விடுத்துள்ளார். டீஐடியினரிற்கு துரித  நடவடிக்கைகளில் ஈடுபடுவது மற்றும் விசேட ஆயுதங்களை கையாள்வதற்கான பயிற்சியை வழங்கி விசேட பிரிவொன்றை உருவாக்கவேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
நாலக டி சில்வாவின் கோரிக்கையை பொலிஸ்மா அதிபர் ஏற்றுக்கொண்டார் விசேட அதிரடிப்படையினரை இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் விசேட அதிரடிப்படையின் தளபதி அவ்வாறான பயிற்சியை வழங்க மறுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages