Comments System

header ads

சமூகங்களை ஒன்றிணைப்பதில் பிரதி அமைச்சர் ஹரீஸின் தலைமைத்துவத்தை நான் மெச்சுகின்றேன், 'ஸ்போர்ஸ்ட் பெஸ்ட் பவுண்டேசன்' - அமைச்சர் பைசர் முஸ்தபா

சமூகங்களை ஒன்றிணைப்பதில் பிரதி அமைச்சர் ஹரீஸின் தலைமைத்துவத்தை நான் மெச்சுகின்றேன், 'ஸ்போர்ஸ்ட் பெஸ்ட் பவுண்டேசன்' - அமைச்சர் பைசர் முஸ்தபா

(அகமட் எஸ்.முகைதீன் றியாத் .மஜீத்)
சிலர்அரசியலுக்குள் அதிகாரங்களுக்காகவும் தனிப்பட்ட நலன்களைஅடைந்து கொள்வதற்காகவும்நுழைகிறார்கள்ஆனால் பிரதிஅமைச்சர் ஹரீஸ் மக்களோடுஇருந்து மக்களுக்காக வேலைசெய்பவர் குறிப்பாகஇளைஞர்களின் எதிர்காலத்திற்காகசெயற்படுகின்றவர் எனஉள்ளுராட்சிமாகாண சபைகள்மற்றும் விளையாட்டுத்துறைஅமைச்சர் பைசர் முஸ்தபாதெரிவித்தார்.
அரச தொழில் முயற்சி மற்றும் கண்டிநகர அபிவிருத்தி பிரதியமைச்சரும்ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்பிரதித் தலைவருமான சட்டத்தரணிஎச்.எம்.எம்ஹரீஸின்எண்ணக்கருவில் கிராம மட்டத்தில்விளையாட்டுத்துறையைஊக்குவிக்கும் நோக்கைஅடிப்படையாகக் கொண்டு'ஸ்போர்ட்ஸ் பெஸ்ட் பவுண்டேசன்'எனும் அமைப்பினைஅங்குரார்ப்பணம் செய்து வைக்கும்நிகழ்வு நேற்று (13) வியாழக்கிழமைகொழும்பு கலதாரி ஹோட்டலில்நடைபெற்றது.
பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் தலைமையில் நடைபெற்றஇந்நிகழ்வில் உள்ளுராட்சி மாகாணசபைகள் மற்றும்விளையாட்டுத்துறை அமைச்சர்ஜனாதிபதி சட்டத்தரணி பைசர்முஸ்தபா பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதேமேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானாபாராளுமன்றஉறுப்பினரும் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம்அடைக்கலநாதன்இலங்கைக்கானகுவைத் நாட்டு தூதுவர் கலாப் பூதுஹைர்அவுஸ்திரேலியாவின்கஸ்சல்லோ குறூப் நிறுவனத்தின்பணிப்பாளர் கஸ்சல்லோமார்சல்லோதென் கொரியாவின்என்.வீ.ஜி குறூப் நிறுவனத்தின்பணிப்பாளர் லிம் டொங் பியோ,மற்றும்   வெளிநாட்டு தூதுவர்கள்,உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள்,விளையாட்டுத்துறைவிற்பன்னர்கள்,விளையாட்டுத்துறை ஆர்வலர்கள்,தொழிலதிபர்கள்,ஊடகவியலாளர்கள் என பலரும்கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அமைச்சர் அங்குஉரையாற்றுகையில்,
பிரதி அமைச்சர் ஹரீஸ் ஒருஅரசியல்வாதி அதற்கும் அப்பால்அவர் ஓரு சட்டத்தரணிஅனைத்துக்கும் மேலாக அவர் ஒருமனித நேயமிக்கவர்.  அவருடன்இணைந்து செயற்படுவதில் நான்பெருமையடைகின்றேன்அவருக்குஎதிர்காலம் பற்றிய சிறந்ததூரநோக்கு சிந்தனை உள்ளது.நாங்கள் சகோதரர்களாக சிந்தித்துசெயற்படவேண்டும்.
சிலர் தனது சமூகம் பற்றிசிந்திக்கிறார்கள்  சிலர் பிரதேசரீதியாக சிந்திக்கிறார்கள்நாங்கள்தேசியம் என்ற வகையில்முன்னேறிச் செல்ல வேண்டும்நான்நினைக்கின்றேன் ஹரீஸினால்ஆரம்பிக்கப்பட்டுள்ள 'ஸ்போர்ஸ்ட்பெஸ்ட் பவுண்டேசன்அமைப்புதெளிவான இலக்குகளின் ஊடாகசரியான பொறிமுறைகளைக்கையாண்டு ஒரே இலங்கை என்றஇலக்கை அடைய முடியும்.
கடந்த 30 வருட யுத்தத்தினால்கிழக்கு மாகாணம்பின்னடைந்திருந்ததுயுத்தத்தினால்மக்களின் உடமைகளும்வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டுசகோதரத்துவம் சிதைந்திருந்தது.சகோதரத்துவத்தைகட்டியெழுப்புவதற்கும்மக்களைஒன்றிணைப்பதற்குமான ஒருஊடகமாக விளையாட்டுஅமைகிறதுமக்களைஒன்றிணைப்பதில் பிரதி அமைச்சர்ஹரீஸின் தலைமைத்துவத்தை நான்மெச்சுகின்றேன்.
இன்று கிழக்கு மாகாண அரசியல்பிளவுபட்டிருக்கிறதுஇதனை ஒருகுடையின் கீழ் கொண்டுவருவதற்குபிரதி அமைச்சர் ஹரீஸ் செயற்பட்டுவருகின்றார்அவர் சமூகத்தைப்பற்றியும் நாட்டைப் பற்றியும்சிந்தித்து செயற்படுகின்றவர்.அவருடைய தூர நோக்குபாதையையும் அவர் முன்னோக்கிசெல்கின்ற பாதையையும் நான்பாராட்டுகிறேன்.
விளையாட்டுத்துறை அமைச்சர்என்ற வகையில் இந்த அமைப்புசரியான நேரத்தில்உருவாக்கப்பட்டுள்ளது.இதனையிட்டு பிரதி அமைச்சர்ஹரீஸூக்கு நான் நன்றி கூறகடமைப்பட்டுள்ளேன்.
விளையாட்டு மக்களைஒன்றினைக்கும் துறையாகும்நான்மிகவும் அதிஸ்டத்துக்குரியவன் நான்விளையாட்டுத்துறை அமைச்சராகஇருக்கையில் எமது தேசிய அணிகள்நல்ல முறையில் பிரகாசிக்கின்றநேரத்தில்விசேடமாக கிரிக்கெட்அணியின் வெற்றியினால் மக்கள்எங்களை பாராட்டுவார்கள் ஆனால்நாங்கள் சந்தோசமடைய முடியாது,அப்பாராட்டுக்குரியவர்கள் நாங்கள்அல்ல.
வலைப்பந்தாட்டம்கரம்கிறிக்கெட்போன்றவற்றில் வெற்றிபெற்றுள்ளோம்அதற்கு புகழ்அமைச்சருக்கு வருகிறதுஆனால்அந்த புகழுக்குரிய உரிமைஎமக்கில்லைஏனென்றால்வீரர்களினதும்சம்மேளனங்களினதும் கடினஉழைப்பினால் பெற்றவெற்றியாகும்.
ஹரீஸ் திறமையான அரசியல்வாதிவிளையாட்டுத்துறை பிரதிஅமைச்சராக இருந்துவிளையாட்டுத்துறைக்கு நிறையவேசெய்திருக்கின்றார்அதன்தொடர்ச்சிதான் என்னுடையவிளையாட்டுத்துறை அமைச்சுநான்உங்களுக்கு உதவி செய்யஇருக்கிறேன்.
நாம் இலங்கையர்கள் என்றுசிந்திக்க வேண்டும் சிறுபான்மைபெரும்பான்மை என்ற எண்ணத்தைதவிர்த்து நாம் ஒன்றென்றுநினைத்து ஒரு கிரிக்கெட் அணிபோன்று செயற்பட வேண்டும்அரசியல்வாதிகள் தான் இனமத,மொழி ரீதியான பிரிவினைகளைவிதைக்கிறார்கள்மக்களின்வாக்குகளை இலக்குவைத்துஇப்படிச் செய்கிறார்கள்.
பிரதி அமைச்சர் ஹரீஸ்இளமையான துடிப்புள்ளதிறமையான தலைவர்கிழக்குமாகாணத்தில் விளையாட்டுத்துறைஊடாக மக்களுடைய வாழ்வியலில்சிறந்த மாற்றத்தை கொண்டுவரமுடியும் என நம்புகிறேன்அமைச்சர்என்ற வகையில்வடக்கு கிழக்குஅணிகளை தெற்கு பிரதேசஅணிகளுடன் இணைத்துவிளையாட்டுப் போட்டிகளை நடாத்திசகோதரத்துவத்தையும் நட்பையும்வளர்க்க வேண்டும் என்றஎண்ணமுள்ளது.
பல நாடுகளில்குழுக்களுக்கிடையிலானபிரச்சினைகளைத் தீர்ப்தற்குவிளையாட்டு உறுதுணையாகஇருக்கிறதுஅதனடிப்படையில்தேசிய நல்லிணக்கத்தைஏற்படுத்துவதற்கு 'ஸ்போர்ஸ்ட்பெஸ்ட் பவுண்டேசன்பாடுபடவேண்டும் எனவும் தெரிவித்தார்

Post a Comment

0 Comments