Comments System

header ads

முஸ்லீம்களின் உரிமைக்கான கட்சி முஸ்லீம் காங்கிரஸ் மாத்திரமே; ALM.நஸீர் பாராளுமன்ற உறுப்பினர்


மர்ஹூம் பெருந்தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 18வது நினைவு தினத்தை  முன்னிட்டு கௌரவ. ஏ.எல்.எம். நஸீர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கிய விசேட செய்தி.

இலங்கை முஸ்லீம்களுக்கென்று தனியான வரலாறு தந்த, எமது பேரியக்கத்தின் தந்தை பெருந்தலைவர்  மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் சிரார்த்த தினத்தில் அவரது கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை மீட்டிப் பார்ப்பது சாலப் பொருத்தமானது என்றே நாம் நினைக்கின்றோம். 

பாசிஸப் புலிகளின் கோரப்பிடிக்குள் இருந்த முஸ்லீம் சமூகம் தனது தனித்துவத்தை "தனித்தமிழ் ஈழம்" என்ற போர்வைக்குள் சில காலம் மறந்திருந்தது. ஈழப்போராட்டத்தை மிகவும் முஸ்லீம்கள் நேசித்த நிலையில் அவர்களதும், அன்றைய அரசாங்ககளதும் முஸ்லீம்கள் மீதான மறைமுக அழுத்தங்களையும், திணிப்புகளையும் உடைத்தெறியும் ஒரு ஒளியாகவே பெருந்தலைவர்  மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் மிளிர்ந்தார்கள். 

பெருந்தலைவரின் மரணத்தின் பிற்பாடு, பல்வேறு சவால்களையும் தாங்கி இன்றைய தலைமை கௌரவ. அமைச்சர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள், முஸ்லீம்களின் உரிமை தொடர்பிலான சமூக எழுச்சிக்குத் தேவையான பல்வேறு சந்தர்ப்பங்களையும் இன்றைய நமது பேரியக்கத்தின் தலைமையாக  நமக்காக முன்னெடுத்து வருகின்றார்.நிலப்பிரச்சனைகள், அதிகார பகிர்வுகள், தேர்தல் முறைமை மாற்றம், வளப்பகிர்வு, பாதுகாப்பு என எல்லாத் துறைகளிலும்  சாணக்கியமான பல்வேறு நகர்வுகளை அவர் மேற்கொண்டு வருகின்றமையை மறைந்த தலைவரின் பாதையை, பணியை எமது பேரியக்கம் தொடர்ந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்துவதற்க்காக நாம் ஞாபக மூட்டவேண்டியுள்ளது.

மறைந்த பெருந்தலைவரின் அரசியல் வாரிசுகளாகவும், சமூகப்போராட்டத்தின் போராளிகளாகவும் இயங்கி வருகின்ற நாம் அனைவரும் இவ்வாறான தருணத்தில் விஷேடமாக அவருக்காக பிராத்தனை புரிவது இன்றியமையாததாகும். அதேவேளை நமது நிகழ்கால தலைமையின் நீண்ட சுக ஆரோக்கியத்திற்காகவும் நாம் பிரார்த்திக்கின்றோம். 

அல்லாஹு அக்பர் 

Post a Comment

0 Comments