பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் ரமழான் விஷேட செய்தி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 17, 2018

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் ரமழான் விஷேட செய்தி


-அன்வர் நௌஷாத் -

புனித ரமழான் மாதத்தை மீண்டும் ஒரு முறை சந்திக்கும் பாக்கியத்தை தந்து   இப் புனித ரமழான் மாதம் சுமந்துவரும் அனைத்து அருள்பாக்கியங்களையும், ஆன்மீக உயர்வுகளையும் சகல இஸ்லாமிய சகோதரர்களும் அடைந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவருக்கும், அருள் புரிய வேண்டும் என ரமழான் விஷேட  வாழ்த்து செய்தியில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ல்.எம்.நசீர் தெரிவித்துள்ளார். 

மேலும் இப்புனித அமல்களுக்கான மாத த்தில் நாம் நமது செயல்கள்  யாவற்றையும் இறைவனின் முழுப் பொருத்தத்தை கொண்டதாகவும், அமல்களாகவும் ஆக்கிக் கொள்ளவேண்டியுள்ளது. எமது நாட்டின் நிரந்தர சுபீட்சத்திற்காகவும் நாம் வல்ல இறைவனை பிரார்த்திக்க வேண்டும்.  விசேடமாக நமது சகோதர உலக முஸ்லீம்களின் அமைதியான வாழ்க்கைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் நாம் பிரார்த்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம். 

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே, நமக்கிடையே மிகச் சாதாரண காரணங்களுக்கு நாம் பல்வேறு பிளவுகளை கண்டிருப்போம், இப்புனித நாட்களில் அவற்றைக் களைந்து சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருடனும் ஒற்றுமையாகவும் ஒரு காத்திரமான உறவுடன் வாழ வழி செய்ய வேண்டும். 

எல்லாம் வல்ல நாயன் நமது அமல்களையும், நம்மையும் பொருந்திக் கொள்வானாக. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages