Breaking News

ஆசிரியர்கள் மீதான "கைநாட்டு" (Finger Print) திணிப்பு அவசியமா ?


- அபூ ஜாஸி -

மாணவர் கல்வியை காவு கொள்ளும் ஒரு அபரிமிதமான முயற்ச்சியே இந்தக் கைநாட்டு(finger print) விவகாரம். 

அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் இருந்து கட்டாயமாக வேலை கொள்ளும் முதலாளி வர்க்கத்தின் பாவனை இயந்திரமான கைநாட்டும் இயந்திரம் இப்போது இலங்கை பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டு இப்போது கிழக்கு மாகாணத்தின் மூலை முடுக்குகள் எங்கும் வியாபித்து விட்டது. (கட்டாயமாக பொருத்தப்பட்டுள்ளது) 

இந்நிலையில் இதன் சாதக பாதகங்களை பலவாறாக விமர்சிக்கப்படுகின்ற போதும், அதிபர்களின் தலையில் இருந்த ஒரு பெரிய சுமையை இறக்கி விட்டிருக்கின்றது. அதுதான் சிவப்புக் கோட்டு சமாச்சாரம் "பாகுபாடின்றிய சிவப்புக்கோடு"   மாணவர் கல்வியை இலக்காக கொண்டு செயற்ப்படும் அதிபர்கள், அலுவலகங்களை /அலுவலர்களை திருப்திப்படுத்தும் அதிபர்கள், சமூகத்தின் ஒரு குழுவை திருப்திப் படுத்தும் அதிபர்கள் என வகைப்படுத்தப்படும் அதிபர்களில் ஒரு சாராருக்கு இது வரப்பிரசாதம் தான்.

இந்நிலையில் உள்ளே அகப்படும் ஆசிரியர்கள் எவ்வாறான ஒரு கட்டயத்திற்கு உட்படுகிறார்கள்.
சம்பவம் 01 
இடம் : ஒலுவில் சந்தி தேநீர்கடை 
நேரம் : காலை 7.40 
காலநிலை : தெளிவானது 
என்ன சார் ஸ்கூலுக்கு போகல்லையா ? வேற எங்கையும் பிரயாணமா ? வெளிக்கிட்டு வந்திருக்கிங்க ? கேள்விகள் அடுக்கப்பட்டன.

ஆசிரியர் குனிந்து தனது போனை ஓப் செய்கிறார் அப்படியே "இல்ல சேர் காலைல சின்ன மகன் கொஞ்சம் குளறுபடி அவர சரி செய்திட்டு வர ரெண்டு நிமிஷம் பிந்திட்டு, இனி என்ன பின்கருக்கு நம்மட பிரச்சன தெரியுமா ? 
அதிபருக்கு லீவு சொல்லிட்டன், பரவால்ல வாங்க சேர் எண்டார், ஆனாலும் முந்திய மாதிரி இல்லையே. இண்டைக்கு ஏ.எல் புள்ளைகளுக்கு அசைமென்ட் ஒண்டும் இரிக்கி. போய் சொல்லிட்டு வருவமா எண்டும் யோசிக்கன் அதுவும் செரிதான் அத முடிச்சிட்டு வீட்ட போவம்" என்றவாறு ஓடர் பண்ண சொன்ன ப்ளேன் ரீ யை தடுத்து விட்டு வெளிச் செல்கிறார்.

சம்பவம் 02
இடம் : ஒரு உயர் பாடசாலை
நேரம் காலை : 8 மணி ( விடுமுறை தினம் விசேட வகுப்பு)
காலநிலை : சீரானது 
கடந்த முறை புவியியல் பாடத்தை மிகச் சிறப்பாக கற்பித்த ஆசிரியை ஒரு ஆங்கிலப்பாட ஆசிரியை அவரது ஓய்வு வேளைக்கு அவராக அதிபரிடம் கேட்டு அப்படத்தை படிப்பிக்கிறார். சாதாரண தர மாணவர்களுக்கு செப்டெம்பர் மாதத்தில் சிலபஸ் முடித்து பேப்பர் கிளாஸ் எண்டு அமர்க்களம் பண்ணுவார் -  ஒரு நிமிடம் ஐந்து நிமிடம் பிந்தி வந்தாலே போதும் மனசில குற்ற உணர்ச்சி காணததுக்கு ஹாப் டே, சோர்ட் லீவ் எண்டு வேற இத விட வராம விட்டா சரிதானே சேர், நவம்பர்ல சிலபஸ முடிச்சா ISA ,ADE மாரும் ஒண்டும் கேக்கேலா ?!!! 

இப்படி பல சம்பவங்களின் தொகுப்பே இக்கட்டுரை . படிப்பிக்காமல் தமது சம்பளத்தை மிகப் பிழையாக எடுக்க முனையும் ஆசிரியர்களும் நமது சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் மிகக் குறைவு. 
ஆனால் மாணவர்களுக்காக தங்களை தியாகம் செய்யும் ஆசிரியர்கள் ஏராளம். நமது மாகத்தின் பெருமை, மாவட்டம், வலயம், கோட்டம், பாடசாலை என பெருமைகளையும் புகழினையும் தக்க வைக்க இந்த ஆசிரியர்களினால் தான் முடிகிறது. இவர்களின் இயலாமையுடன் இச் சித்து விளையாட்டு சீண்டிப் பார்க்கின்றது. 

அல்லது உயர் மன அழுத்தம் காரணமாக உடல் நலக் குறைபாட்டை ஏற்படுத்தும் ஒரு உடனடியான விளைவை அல்லது அபாயகரமான நிலைமையை இது உண்டு பண்ணும்

மேற்கத்தேய நாடுகளின் கல்வி முறையை பின்பற்ற எத்தனிக்கும் நாம், அங்கு  ஆசிரியர் நலன் பேணப்படும் விதத்தியும் இங்கு அமுல் நடாத்துதல் மிக இன்றியமையாதாகும். 
இச்செயன்முரையானது வரவேற்க கூடிய விளைவை கொண்டதாக அமைய வேண்டும் எனில்...
  • பாடசாலைகளில் ஆசிரியர் தங்குமிட வசதி
  • அல்லது தங்கு மிடத்துக்கு அருகிலான பாடசாலை 
  • சீரான போக்கு வரத்துக்கான நிவாரணம் (வாகன பெர்மிட், எரிபொருள் அலவன்ஸ்)
  • பொருத்தமான சம்பளம் - வீட்டில் ஒரு செர்வன்ட் வைக்குமளவுக்கு 
நிவர்த்திக்கப்படாத குறைகளை வைத்துக் கொண்டு கட்டாய அமுல் படுத்தல்களை களத்தில் தக்க வைப்பதென்பது எவ்வகையிலும் பொருத்தமற்றது என்றே கொள்ள முடியும். 

ஏனெனில் ஏனைய அலுவலவலர்கள் உயிரற்ற ஜடங்களுடனேயே தமது கடமைகளை (காகிதாதிகள், இணையங்கள், கணனிகள்) மேற்கொள்கின்றனர். ஆனால் ஆசிரியர்களின் கடமைகள் எவ்வாறேனினும் உயிருள்ள, உயர் துலங்கலைக் காட்டக்கூடிய மாணவர்களுடன் செயற்ப்பட வேண்டியுள்ளது. இதில் உயர் நல (Highly appreciate) ஊக்கம் கொண்ட மனிதர்களே ஆசிரியர்களுக்கு தகுதியாக முடியும். 

இந்நிலையில் பாடசாலைகளில் பொருத்தமான கற்றல் பேறுகளை அல்லது உயிரோட்டமான நிலையை எதிர்பார்க்கும் சாராரிடம் ஆசிரியர்கள் மீதான திணிப்பு அல்லது அழுத்தத்தை இல்லாமலாக்கும் திட்டம் சமமாக வளர்க்கபடல் அவசியமாகும்.

(தொடரும்)No comments