தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை ; உயர்நீதிமன்றம் தீர்ப்பு


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து பாகிஸ்தானின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீப்பை இருந்தவேளை, பனாமா லீக்ஸ் விவகாரத்தில்  குற்றவாளியென பாகிஸ்தானின் உயர்நீதிமன்றம் கடந்தாண்டு ஜூலை மாதம் அறிவித்து, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. 
இதனை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்த அவர் அந்த வழக்கை மேல்முறையீடு செய்தார்.
நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடையா என தகுதி நீக்க வழக்கில் குழப்பம் எழுந்தது. 
இதனை அடுத்து, இது தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்து தீர்ப்பை ஒத்திவைத்தது. 
இந்நிலையில், நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை என இன்று பாகிஸ்தானின் உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments