Comments System

header ads

திருமலை நகரம் தமிழ் கூட்டமைப்பு வசமானது

(ஹஸ்பர் ஏ ஹலீம்)

திருகோணமலை நகராட்சி மன்றத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது.நேற்று(09) திங்கட் கிழமை பகல் 2.30 இடம் பெற்ற சபை அமர்வின் போது கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் கூடிய நகராட்சி மன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ந. இராசநாயகம் தலைவராகவும் உபதலைவராக சே.சிறிஸ்கந்தராஜா  தெரிவு செய்யப்பட்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு 09 ஆசனங்கள் ஸ்ரீ லங்கா பொதுஐன பெரமுன 04 ஆசனங்கள் ஐக்கிய தேசிய கட்சி 02 ஆசனங்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 02 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 01 ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் 01 ஆசனம் தமிழர்களின் சமூக ஐனநாயக கட்சி 01 ஆசனம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 01 ஆசனம் தமிழ் ஜக்கிய விடுதலை முன்னனி 01 ஆசனம் சுயேட்சைக்குழு 02 ஆசனங்கள் என இம்முறை இடம் பெற்ற கலப்பு தேர்தல் முறையின் மூலமாக 24 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த முறை 12 உறுப்பினர்கள் சபையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
13மேலதிக வாக்குகளால் ந. இராசநாயகம் தலைவராக தெரிவுசெய்யப்பட்மை குறிப்பிடத்தக்கது. 

இந் நிகழ்வில் எதிர்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் கலந்து சிறப்பித்தார்.

Post a Comment

0 Comments