Header Ads

Breaking News

ஆளுமைமிக்க தலைமைகள் பாடசாலைகளில் இருந்தே உருவாகின்றன : ஏ.எல்.எம். நசீர் எம்.பி



ஆளுமை மிக்க தலைவர்கள் உருவாவதற்கான களம் பாடசாலைகளே மாணவர்கள் அதனை மிக சிறப்பாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ  ஏ.எல்.எம் . நசீர் அவர்கள் இன்று தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை  தேசிய பாடசாலையில் "சிறகுகள் " அமைப்பினரின் கௌரவிப்பு நிகழ்வுகளில் கலந்து கொண்டு  உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

பதவிகளும், பட்டங்களும் இறைவனாலேயே தீர்மானிக்கப் படுகின்றது. முயற்சி மாத்திரமே நமது கைகளில் இருக்கின்றது. நாம் எவ்வாறு நடந்து கொள்கின்றோம் என்பதைக் கொண்டுதான் இறைவன் நமது நிலையை தீர்மானிக்கிறான்.

மாணவர்கள் மிக கூடுதலான அளவில் சமூகப்பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் தமது இலக்குகளை தமது பிள்ளைகளை கொண்டே அடைய முயற்சிக்கிறார்கள். எனவே பிள்ளைகளை மிக காத்திரமான முறையில் வழிநடத்த முயற்சிக்கிறார்கள். நமது மார்க்க விழுமியங்களை பின் பற்றி இன்னும் நீங்கள் சமூக அடையாளங்களை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.





No comments