மட்டக்களப்பில் வாள்வெட்டு ; ஆலய பூசாரிகள் மறியலில் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, April 6, 2018

மட்டக்களப்பில் வாள்வெட்டு ; ஆலய பூசாரிகள் மறியலில்

மட்டக்களப்பு தலையமையக பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மாமாங்கம், குமாரபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டு, கத்திக்குத்து சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசாரிகள் இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற, நீதவான் எம்.கணேசராஜா நேற்று உத்தரவிட்டார். 
கடந்த சில மாதங்களாக குமாரபுரம்  மாமாங்கம் ஆகிய இரு பிரதேசங்களைச் சேர்ந்த இரு குழுக்களிடையே மோதல்கள் இடம் பெற்றுவருகின்றது.
இந் நிலையில் கடந்த 4ஆம் திகதி இரவு குமாரபுரத்தில் வீதியில் வைத்து அதே பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் மீது ஒரு குழுவினர் வாள்வெட்டு கத்திக்குத்து தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பியோடினர் இதில்  19, 49 வயதுடைய இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் பெரும் குற்றப்பிரிவு பெறுப்பதிகாரி ஏ.எம்.என் பண்டார தலைமையிலான பொலிஸ் சாஜன் கே.சி.எம். முஸ்தப்பா உட்பட பொலிஸார் சந்தேகத்தின்பேரில் மாமாங்கப் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆலய பூசாரிகளை வியாழக்கிழமை கைது செய்தனர்.
அப்பகுதியில் உள்ள ஆலயத்தில் கருவறையில் வைக்கப்பட்ட வாளை குறித்த நபர்கள் எடுத்துச் சென்று இருவர் மீது தாக்குல் மேற்கொண்டுவிட்டு திரும்ப அந்த வாள் இருந்த இடத்தில் வைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்ததையடுத்து அந்த வாளை பொலிசார் மீட்டதுடன் சந்தேக நபர்கள் இருவரையும் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில்  நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்போது இரவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். 
இதேவேளை இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக இரு குழுக்களுக்கிடையே 4 கத்திக்குத்து வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் மோதல்களும் இடம்பெற்று வருவதால் இப்பகுதி  பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் வீதிகளில் செல்லமுடியாத ஒரு பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளது. எனவே இச் சம்பங்களுடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து உடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  தீவிர நடவடிக்கை எடுத்துவருவாதக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages