முஸ்லிம் காங்கிரஸ் பிள்ளையான் அணி கூட்டு வாழைச்சேனையை கைப்பற்றியது - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

East Times:Bringing news stories from Sri Lanka

தலைப்புச் செய்திகள்

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, April 5, 2018

முஸ்லிம் காங்கிரஸ் பிள்ளையான் அணி கூட்டு வாழைச்சேனையை கைப்பற்றியது



-அஸ்கர் அலி -
கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச சபைக்குத் தெரிவான பிரதிநிதிகள் பதவியேற்கும் வைபவம் இன்று 06.04.2018ம் திகதி காலை 9 மணிக்கு இடம்பெற்றது.
இம்முதலாது அமர்வில் தவிசாளர், பிரதித்தவிசாளர் தெரிவும் இன்று இடம்பெற்றது.
தவிசாளராக நாசிவன்தீவு-புத்துக்குடியிருப்பு ஐந்தாம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (பிள்ளையான் அணி ) கட்சியைச் சேர்ந்த  பெண் வேட்பாளர் சோபா ஜெய ரஞ்சித் திறந்த வாக்கெடுப்பில் பன்னிரெண்டு வாக்குகளைப்பெற்று மூன்று மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  அவரை எதிர்த்துப்போட்டியிட்ட தமிழ் கூட்டமைப்பு வேட்பாளர் சயோன் ஒன்பது வாக்குகளையே பெற முடிந்தது.

பிரதித்தவிசாளராக சிறிலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக சந்திவெளியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  யசோதரன் பன்னிரெண்டு வாக்குகளைப் பெற்று மூன்று மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் கமலநேசன் ஒன்பது வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
இந்த இரு வாக்கெடுப்பிலும் பொறியிலாளர் எம்.எம்.அப்துல் ரஹ்மான் தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர் கே.எல்.இப்ராஹீம் (அஸ்மி)  அவர்களும், கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை உறுப்பினரும் நடுநிலை வகித்தமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம், நல்லாட்சிக்கான தேசிய ஐக்கிய முன்னணியில் மாவடிச்சேனை-பிறைந்துறைச்சேனை வட்டாரத்திலிருந்து நியமனம் பெற்ற கே.எல்.இப்ராஹீம் (அஸ்மி) அவர்களும் பதவியேற்றுக் கொண்டார்.
முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகத் தெரிவு செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்களும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு ஆதரவாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-ஐக்கிய தேசிய முன்னணியின் இரு முஸ்லிம் உறுப்பினர்களும் ஒரு தமிழ் உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தங்களது ஆதரவை வழங்கியிருந்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்-ஐக்கிய தேசிய முன்னணி, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்ற உறுப்பினர்களும் பதவியேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages