ஐந்து கோடி இழந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபா நஷ்டஈடு ; சமூகமும் அரசும் என்ன செய்கிறது - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, April 10, 2018

ஐந்து கோடி இழந்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபா நஷ்டஈடு ; சமூகமும் அரசும் என்ன செய்கிறது


பணம் சம்பாதிப்பது இறைவன் எமக்கு அளித்த வரம் ஒரு சிலர் பிழையான வழியிலும், சிலர் சரி-பிழை இரண்டையும் சிலர் சரியை மட்டும் செய்து வியாபாரம் செய்கின்றனர் ஆனால் பெரும்பாலான முஸ்லிம்கள் ஹலாலாக அதாவது சரியாக செய்கின்றனர்.


அப்படி சரியாக செய்து உழைப்பது என்பது கத்தியில் நடப்பது போலாகும், அப்படி கத்தியில் நடந்து உழைத்து சேர்த்துவைத்த பணததை முஸ்லிமாய் பிறந்த ஒரு காரணத்திற்காக இழந்து தவிக்கும் நிலை இலங்வைாழ் வர்த்தர்களுக்கு வந்த நினைத்துப்பார்க்கையில் நெஞ்சம் வலிக்கிறது.அளுத்கம தொடக்கம் கண்டிவரை முஸ்லிம் வர்த்தகர்கள் இழந்த கோடான கோடி பணங்களுக்கு கிடைத்த இழப்பீடுதான் என்ன கோடியில் நஷ்டமைந்தால் ஆயிரத்தில் இழப்பீடு, அவர்களின் பணம் மட்டுமின்றி தன்னம்பிக்கையும் இழக்கப்படுகிறது. குடும்ப வாழ்வியல் பிள்ளைகளின் எதிர்காலம் என அனைத்தும் பாழ் கிணற்றிக்குள் விழுகிறது.இலங்கை வாழ் முஸ்லிம் சமூகமே நாங்கள் முஸ்லிமாய் பிறந்தது தவறா இல்லை நம்மை ஆளும் அரசியல் பிரமுகர்களின் தவறா? எங்களுக்கு தீர்வுகள் இல்லையா?இப்படி சம்பவங்கள் நடந்து நஷ்டங்கள் அடையும் போதெல்லாம் வெறும் செய்திகளாக பார்த்துவிட்டும் போகும் நிலை மாறாதா?எங்களுக்கு தெரிந்த இந்த வியாபாரத்தை விட்டால் வேறு வழியில்லை, எங்கள் பிள்ளைகள் நடுத்தெருவில் நிற்கிறது,, நாங்கள் பிச்சை கேட்க இனி பள்ளிக்கு வரவேண்டும் என அழும் வர்த்தகர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.அரசியல் எனும் விடயத்தை விட்டுவிட்டு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்காய் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றிணையுங்கள், இனியும் ஒரு கலவரம் வராமல் தடுக்க முனைப்பாக இருங்கள்

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages